ஜெருசலேம்: பேஸ்புக்கின் 'ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்லேஷன்' வசதி மூலம் மொழிமாற்றம் செய்யப்பட்ட பேஸ்புக் பதிவினைக் கொண்டு, பாலஸ்தீன இளைஞர் ஒருவரை இஸ்ரேல் போலீசாரை கைது செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது
இது குறித்து இஸ்ரேலின் மேற்கு கரை பகுதி போலீசாரின் செய்தித்தொடர்பாளரை மேற்கோள் காட்டி, பாலஸ்தீனத்திலிருந்து வெளிவரும் ஹாரேட்ஸ் செய்தித் தாளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
பாலஸ்தீனத்தின் மேற்கு கரைப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், அங்குள்ள பெய்தர் லிட் குடியிருப்பு பகுதியில் கட்டுமானத் தொழிலாளியாகப் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 15-ஆம் தேதி தனது பேஸ்புக் பக்கத்தில், தன்னுடைய பணித்தளத்தில் உள்ள புல்டோசர் ஒன்றின் அருகில் நின்று கொண்டு, கையில் காபி மற்றும் சிகரெட்டுடன் சிரித்து கொண்டிருப்பது போன்ற புகைப்படத்தினை பதிவேற்றியிருந்தார்.அதில் அவர் உள்ளூரில் பேசப்படும் கொச்சையான அரபி மொழியில் 'உங்கள் அனைவருக்கும் காலை வணக்கம்' என்னும் வாசகத்தினையும் பயன்படுத்தியிருந்தார்.
பொதுவாக சந்தேகத்துக்குரியதாக கருதப்படும் பாலஸ்தீன இளைஞர்களின் பதிவுகளை இஸ்ரேல் போலீசார் கண்காணிப்பது வழக்கம். அதே போல அவரது இந்தப் பதிவினை கண்காணித்த இஸ்ரேலின் மேற்கு கரை பகுதி போலீசார் அவரைக் கைது செய்து விட்டனர்.
காரணம் என்ன என்றால், பொதுவாக இதற்கு முன்பாக சில சமயங்களில் இஸ்ரேலியர்கள் மீது புல்டோசரை பயன்படுத்தி தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்படடுள்ளன. எனவே இந்த புகைப்படத்தினை பார்த்தவுடன் அவரது பதிவினை ஆராய்ந்துள்ளார்கள். ஆனால் விசாரித்த இஸ்ரேல் போலீசார் அரபி மொழி தெரியாதவர்கள் என்பதால் பதிவினை பேஸ்புக்கின் 'ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்லேஷன்' வசதி மூலம் மொழி மாற்றம் செய்துள்ளனர். அதில் 'அவர்களை தாக்கு' என்பதாக அவர்களுக்கு இஸ்ரேலிய மொழியாக்கம் கிடைத்துள்ளது. எனவே அந்த இளைஞர் மீது வன்முறையைத் தூண்டியதாக சந்தேகத்தின்பேரில் வழக்கு பதிவு செய்து கைது செய்து விட்டனர்
ஏன் என்றால் அந்த இளைஞர் பயன்படுத்திய கொச்சையான அரபி மொழியில் 'உங்கள் அனைவருக்கும் காலை வணக்கம்' என்பதற்கும் 'அவர்களை தாக்கு' என்பதற்கும் ஒரு எழுத்துதான் வித்தியாசம் என்பதுதான் காரணம். பின்னர் அந்த இளைஞரிடம் அரபி மொழி தெரிந்த போலீசார் மூலம் நடத்திய முறையான விசாரணையில் உண்மை தெரிய வந்தது. பின்னர் தங்கள் தவறை உணர்ந்த போலீசார் அவரை விடுதலை செய்து விட்டனர்.
இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எஸ்.எஸ்.பாலாஜி, ஆளுர் ஷாநவாஸ் ஆகியோருக்கு விசிக-வில் முக்கியப் பொறுப்பு!

பரமத்தி வேலூா் ஏலச் சந்தையில் பூக்களின் விலை உயா்வு

நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 4,741 போ் எழுதுகின்றனா்

திருச்செங்கோடு வாக்கு எண்ணிக்கை மையத்தில் மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு: ஆட்சியா்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


