டாக்கா: வங்கதேசத்தின் விடுதலைப் போராட்டம் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த விடியோ ஒன்று பாகிஸ்தான் தூதரகத்தின் முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டதால், தற்பொழுது இரு நாடுகளுக்குமிடையே மோதல் உருவாகி இருக்கிறது
பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருந்த வங்கதேசமானது இந்தியாவின் துணையுடன் அங்கு நிகழ்ந்த சுதந்திர போராட்டத்தின் காரணமாக மார்ச் 26, 1971 அன்று விடுதலை பெற்றது. போரில் ஈடுபட்டு வந்த பாகிஸ்தான் படைகள் இறுதியாக அன்று சரணடைந்ததைத் தொடர்ந்து, 'வங்கபந்து' என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட ஷேக் முஜிபுர் ரஹ்மான், வங்கதேசத்தின் சுதந்தரத்தை அறிவித்தார். அப்பொழுது வங்கதேசத்தின் ராணுவத் தளபதியாக இருந்தவர் ஜியாவுர் ரஹ்மான். பின்னாளில் அவர் அந்நாட்டின் அதிபர் ஆனார்.
வரலாறு இவ்வாறு இருக்க டாக்காவில் இருக்கும் பாகிஸ்தான் தூதரகத்தின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் சமீபத்தில் வீடியோ ஒன்று பகிரப்பட்டது. சுமார் 13.45 நிமிடங்கள் ஓடக் கூடிய அந்த வீடியோவில் வங்கதேசத்தின் சுதநதிரத்தை அறிவித்தவர் ஜியாவுர் ரஹ்மான்தான் என்றும், ஷேக் முஜிபுர் ரஹ்மான் வங்கதேசத்தின் சுதந்திரத்தினை கோரவில்லை என்றும், அவர் வங்காள மொழி பேசும் மக்களுக்காக தன்னாட்சி உரிமையைத்தான் கோரினார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த விடியோ வெளியானதும் கடும் சர்ச்சை ஏற்பட்டது. வங்கதேச ஊடகங்கள் இந்த வீடியோ பற்றி எழுதியதன் காரணமாக நாடு முழுவதும் பரவலான கண்டனங்கள் எழுந்தன.
முதலில் 'பாகிஸ்தான் அபையர்ஸ்' என்ற முகநூல் பக்கத்தில் வெளியான இந்த விடியோவை பின்னர் பாகிஸ்தான் தூதரகத்தின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கம் பகிர்ந்திருந்தது. பின்னர் எழுந்த கண்டனங்களை தொடர்ந்து, அந்த விடியோ நீக்கப்பட்டது.
இது தொடர்பாக வங்கதேசத்திற்கான பாகிஸ்தான் துணைத் தூதர் ரபியுசமான் சித்திக்கினை வங்கதேச வெளியுறவுத் துறை அழைத்து கண்டித்ததுடன், கடுமையான எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. இந்த பதிவு தவறான உள்நோக்கம் கொண்டதும், திசை திருப்பும் முயற்சியும் ஆகும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இத்தகைய தவறான தகவல்கள் மூலம் வரலாற்றினை திரிக்கும் நடவடிக்கைகளில் பாகிஸ்தான் ஈடுபடக் கூடாது என்றும், இந்த விஷயமானது முறையாக பாகிஸ்தானில் தலைமைக்கு தெரியப்படுத்தப்பட்டு, 'அதிகாரப்பூர்வ மன்னிப்பு' அளிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல்களை செய்தியாளர்களிடம் தெரிவித்த வங்கதேச வெளியுறவுத் துறை செயலர் கம்ருல் அசன், விடியோ பகிர்வுக்காக தூதர் மன்னிப்பு கேட்டதுடன் இது வேண்டுமென்றே நடந்தது அல்ல என்றும் , தாங்கள் இங்குள்ள சூழ்நிலையினை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று கூறியதாகவும் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எஸ்.எஸ்.பாலாஜி, ஆளுர் ஷாநவாஸ் ஆகியோருக்கு விசிக-வில் முக்கியப் பொறுப்பு!

பரமத்தி வேலூா் ஏலச் சந்தையில் பூக்களின் விலை உயா்வு

நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 4,741 போ் எழுதுகின்றனா்

திருச்செங்கோடு வாக்கு எண்ணிக்கை மையத்தில் மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு: ஆட்சியா்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


