தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

'போக்மான் கோ' விளையாட்டு மூலம் போனை பறிகொடுத்த மாணவர்கள்

'போக்மான் கோ' என்ற பிரபலமான அலைபேசி விளையாட்டை விளையாடியதன் மூலம் இங்கிலாந்தைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் தங்கள் அலைபேசியை பறிகொடுத்த தகவல் தெரிய வந்துள்ளது

News image
Updated On :17 ஜூலை 2016, 12:23 pm

'போக்மான் கோ' என்ற பிரபலமான அலைபேசி விளையாட்டை விளையாடியதன் மூலம் இங்கிலாந்தைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் தங்கள் அலைபேசியை பறிகொடுத்த தகவல் தெரிய வந்துள்ளது.

'போக்மான் கோ' என்பது பிரபலமான அலைபேசி செயலி வடிவிலமைந்த விளையாட்டு.இது கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ப்ளே ஸ்டோர்களில்கிடைக்கிறது. கணிப்பொறியினால் உருவாக்கப்பட்டுள்ள ஒரு பிம்பத்தை, பயனீட்டாளரின் நேரடியான பார்வையில் இருப்பது போன்ற தோற்றத்தை (ஆக்மெண்டட் ரியாலிட்டி) உருவாக்கும்  ஒரு விளையாட்டு.

பயனீட்டாளரின் அலைபேசியில் உள்ள ஜி.பி.எஸ் வசதியை, கூகுள்  மேப்ஸ் வசதியுடன் இணைத்து இது செயல்படும். இதன் மூலம் குறிப்பிட்ட ஒரு இடத்தில் கணிப்பொறி பிம்பம் மறைத்து வைக்கப்பட்டிருக்கும். அதை பயனீட்டாளர் தன்னுடைய அலைபேசியின் மேற்கூறிய இரு வசதிகள் மற்றும் கேமரா துணை கொண்டு கொண்டு தேடி கண்டுபிடிக்க வேண்டும் என்பதே விளையாட்டு.

இந்த விளையாட்டு கடந்த வியாழனன்று பிரிட்டனில் அறிமுகம் செய்யப்பட்டது. உடனே அது வெகுவாக பிரபலமடைந்து வருகிறது.

இந்நிலையில் 'போக்மான் கோ'  விளையாடி அலைபேசியை இழந்த 3 மாணவர்கள் பற்றிய விபரத்தை இங்கிலாந்தின் பிரபல 'டெலிக்ராப்'  நாளிதழ் வெளியிட்டுள்ளது.

அதன்படி இங்கிலாந்தின் மான்செஸ்டர் பகுதியில் உள்ள ஹுல்ம் என்ற இடத்தில் இந்த விளையாட்டை விளையாடிக் கொண்டே, தனியான ஒரு இடத்திற்கு சென்ற மூன்று மாணவர்களிடம் இருந்து, கொள்ளையர்கள் கத்தி முனையில் அலைபேசியை பறித்துள்ளனர். 

இந்த சம்பவம் குறித்து மான்செஸ்டர் நகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. காவல்துறை கண்காணிப்பாளர் ஜோன் ரவ்லின்சன் கூறுகையில், "நவீன தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி குற்றச்செயல்கள் புரிவதில் குற்றவாளிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.  போக்மான் கோ விளையாட்டு அவர்களுக்கு மற்றுமொரு வாய்ப்பாக அமைந்துள்ளது.எனவே பெற்றோர்கள் தங்கள்  குழந்தைகளை இது குறித்து எச்சரிகை செய்ய வேண்டும் என்று  தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.