சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

ரஷ்யாவில் பயணிகள் ஹெலிகாப்டர் வெடித்து சிதறியது: 15 பேர் பலி

ரஷ்யாவில் பயணிகள் ஹெலிகாப்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 15 பேர் பலியாயினர்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:38 am

PTI

ரஷ்யாவில் பயணிகள் ஹெலிகாப்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 15 பேர் பலியாயினர்.

தலைநகர் மாஸ்கோவிலிருந்து 2,800 கி.மீ. தொலைவில் உள்ள மேற்கு சைபீரியாவின் இகர்கா விமான நிலையத்திலிருந்து எம்ஐ-8 ரக ஹெலிகாப்டர் காலை 9.30 மணிக்கு புறப்பட்டது.

22 பயணிகள் மற்றும் 4 ஊழியர்களுடன் அப்பகுதியில் உள்ள எண்ணெய் பம்பிங் நிலையத்துக்கு சென்று கொண்டிருந்த அந்த ஹெலிகாப்டர், புறப்பட்ட 15 நிமிடங்களில் வெடித்துச் சிதறியது.

இந்த விபத்தில் 15 பேர் பலியாகினர். மேலும் 11 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.