பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

நிகழ்வுகள் - 25 / 11 / 2022

கோஷ்டியாரின் 80-ஆவது ஆண்டு சோளிங்கபுரம்  ஸ்ரீலட்சுமி நரஸிம்ஹ ஸ்வாமி கார்த்திகை மாத 2-ஆவது வார மஹோத்ஸவம்  தக்கான்குளம்  

News image

நிகழ்வுகள் - 25 / 11 / 2022

Updated On :25 நவம்பர் 2022, 10:06 am

மஹோத்ஸவம்
ஸத்குரு ஸ்ரீமான் பிதாம்பர ஸ்ரீநிவாஸ ராமாநுஜதாஸ ஸ்வாமி சிஷ்ய பஜன கோஷ்டியாரின் 80-ஆவது ஆண்டு சோளிங்கபுரம்  ஸ்ரீலட்சுமி நரஸிம்ஹ ஸ்வாமி கார்த்திகை மாத 2-ஆவது வார மஹோத்ஸவம்  தக்கான்குளம்  ஸ்ரீ ஜானகிராம் கல்யாண மண்டபத்தில் நவ. 25 -ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 6மணிக்கு ஸ்ரீ மஹா லட்சுமி பூஜை நடைபெறுகிறது. பின்னர்,  சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு பஜனையுடன் பெரியமலை - சிறியமலை  தரிசனமும், மாலை 6 மணிக்கு ஸ்ரீ விஜய மஹா மந்த்ர பாராயணமும், இரவு 7 மணிக்கு உபன்யாசமும். இரவு 9 மணிக்கு ஸ்ரீ வேங்கடாத்ரி கானநாட்ய பஜனாம்ருதமும் ஸ்ரீ ஹரி மஹா பந்த சேவையும் நடைபெறுகின்றன.
தொடர்புக்கு:  99413 69706 .
•••

அரக்கோணம் ஸ்ரீபால ராமாநுஜ பால பக்த ஜன ஸபாவின் ஸ்ரீகடிகாசல மஹோத்ஸவத்தின்  65-ஆவது கார்த்திகை மாத 3-ஆவது வார விழா தக்கான் குளம் அருகேயுள்ள ஸ்ரீ சி.ஏ.எம். மஹாலில் டிச. 3, 4-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. இதையொட்டி, டிச. 3-ஆம் தேதி காலை 7 மணி முதல் சிறப்புப் பூஜைகளும், இரவு 9 மணிக்கு ஸ்ரீ வேங்கடாத்ரி கானநாட்ய பஜனாம்ருதமும் ஸ்ரீ ஹரி மஹா பந்த சேவையும் நடைபெறுகின்றன. டிச. 4, காலை 5 மணிக்கு ப்ருந்தாவன வஸந்தோஸ்வமும், காலை  6 மணிக்கு மங்களமும் நடைபெறுகின்றன.  டிச. 3 காலை முதல் டிச. 4-ஆம் தேதி காலை வரை ததியாராதனை நடைபெறுகிறது.
தொடர்புக்கு- 93812 25559, 93812 21119.
•••

பக்தி இசைப் பெருவிழா
உலக நன்மையை வேண்டி, 16-ஆவது பக்தி இசைப் பெருவிழா ஸ்ரீவாஞ்சியம் பிரம்ஹ்மஸ்ரீ ராமச்சந்திர பாகவதரின் நூற்றாண்டு விழாவாக, சென்னை மேல மாம்பலம் அயோத்யா அஸ்வேத மகா மண்டபத்தில் டிச. 1 முதல் 5-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.  இதையொட்டி, நாம சங்கீர்த்தனை, பஜனை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 
தொடர்புக்கு- 9444219724.
•••

விசேஷ அத்திமர ஐயப்பன் தரிசனம்
தஞ்சாவூர் எம்.சி.ரோடு சுந்தரம் நகரில் உள்ள ஸ்ரீசுந்தரவிநாயகர், ஸ்ரீதர்ம சாஸ்தா கோயிலில் டிச. 1-இல் நடைபெறும் விழாவில்,  18 அடி உயர அத்திமர ஐயப்பனை 18 படிகளில் அமர்த்தி சபரிமலை முறைப்படி மேல்சாந்திகளால் பூஜை நடத்தப்படுகிறது.  இதையொட்டி,  சிறப்பு ஹோமங்கள், பூஜைகள்,  படி பூஜை, பகவதி சேவை போன்ற வைபவங்கள் நடைபெறுகின்றன.
தொடர்புக்கு- 96772 77277, 76039 96658.
•••

திருவிளக்கு பூஜை
சென்னை பொன்னியம்மன்மேடு வினோபாஜி தெருவில் உள்ள ஸ்ரீகமலவல்லி நாயகி சமேத ஸ்ரீபிரசன்னை லட்சுமி நரசிம்மர் கோயில் அறக்கட்டளை கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீதர்மசாஸ்தா சாமிக்கு 6-ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜை டிச. 16-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறு கிறது.  நிகழ்ச்சி நிரல்: காலை 5.30 மணி- கணபதி ஹோமம், 8 மணி- மங்கள வாத்தியம், சிறப்பு அலங்காரம், தீபதூப ஆராதனை, காலை 11- மலர் பூஜை, பிற்பகல்- 12 மணி- அன்னதானம், மாலை 6- விளக்கு பூஜை.
தொடர்புக்கு- 90032 66240, 98847 28815.

•••
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.