உலகில் அதிக வெப்பம் பதிவான 100 நகரங்களின் பட்டியலில் 98 நகரங்கள் இந்தியாவைச் சேர்ந்தவையாக உள்ளன.
நாடு முழுவதுமே வெப்பம் அதிகரித்து வருவதையே இந்த புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டுவதாக வானிலை ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
மத்திய அரசின் காற்று தரக் குறியீடு தரவுகளின்படி, இதுவரை இல்லாத அளவு வெப்பம் பதிவாகியுள்ளதால், உலகளாவிய வெப்ப அலையின் மையப்பகுதியாக இந்தியா மாறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் வெப்பத்தின் அளவு 40 டிகிரி செல்சியஸுக்கு அதிகமாகவும் சில இடங்களில் 45 டிகிரி செல்சியஸுக்கு அருகிலும் பதிவாகியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் ஓரை (44 டிகிரி செல்சியஸ்), அவுரியா (43 டிகிரி செல்சியஸ்) பகுதிகள், ராஜஸ்தானின் ஜெய்சால்மர் (43 டிகிரி செல்சியஸ்), பலோதி (43 டிகிரி செல்சியஸ்), பிக்னானேர் (43 டிகிரி செல்சியஸ்) பகுதிகளில் சராசரி வெப்பநிலையை விட அதிக வெப்பம் பதிவாகியுள்ளது.
இதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரத்தின் புஷ்வால், ஜல்கோன், துலே, குஜராத்தின் கோத்ரா, நந்தோட் ஆகிய பகுதிகளிலும் (43 டிகிரி செல்சியஸ்) வெப்பம் பதிவாகியுள்ளது. இவ்வாறு உலகின் அதிக வெப்பம் பதிவான நகரங்களின் பட்டியலில் 98 இந்தியாவில் உள்ளன.

அதிக வெப்பம் பதிவான பகுதிகளின் பட்டியல் - காற்று தரக் குறியீடு தரவு
கோடை வெப்பத்தின் அளவு அதிகரித்து வருவதால், வெப்பம் சார்ந்த நோய்களுக்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு மக்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
கடுமையான வெப்பத்திற்கு நீண்ட நேரம் ஆளாகியிருப்பது, வெப்பத்தாக்கம் உள்ளிட்ட தீவிர உடல்நல அபாயங்களுக்கு வழிவகுப்பதுடன், மின் நுகர்வு அதிகரிப்பு மற்றும் சாத்தியமான நீர் பற்றாக்குறைக்கும் காரணமாக அமைகிறது.
அடுத்தடுத்த நாள்களில் ஜம்மு - காஷ்மீர், ஹிமாசலப் பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா, சண்டிகர், தில்லி, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பகுதிகளில் வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Summary
98 of the world's 100 hottest cities are in India Heatwave sweeps across the country
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

இந்த ஆண்டின் மிக வெப்பமான நாள்! தில்லியில் 109.4 டிகிரி வெய்யில்!

கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!

கடும் வெய்யில் வாட்டுவது ஏன்? மழைக்கு வாய்ப்பு?
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை



