பாலாறு பாயும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வழிபாட்டுச் சிறப்புமிக்க பல திருக்கோயில்கள் அமைந்துள்ளன.
காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலையில் 8 கி.மீ. தொலைவில் ஏகனாம்பேட்டைக்கு வடக்கே சிறிது தூரத்தில் நவாஸ்பேட்டையில் வற்றாத செல்வங்களை அளிக்கும் நவநிதீசுவரர் திருக்கோயில் அமைந்துள்ளது.
குபேர ஈசுவரர் - பைரவ நாதர்: இங்கு எழுந்தருளியுள்ள இறைவனுக்கு காசி விசுவநாதர் என்ற பெயரும் உண்டு. குபேரன், தான் இழந்த நவநிதிகளையும் இறைவன் வழங்கியதால் "குபேர ஈசுவரர்' என்றும், காசியைப் போல பைரவருக்கு சிறப்பு ஆகர்ஷன சக்தியை அளித்ததால் "பைரவ நாதர்' என்றும் போற்றப்படுகிறார். அம்பிகை செல்வநாயகி என அழைக்கப்படுகிறார்.
பழைமையான இத்திருக்கோயில் வளாகத்தில் செடிகள், மரங்கள் முளைத்து பராமரிக்கப்படாமல் இருந்ததைக் கண்டு, சென்னை அண்ணாமலையார் அறப்பணிக் குழுவினரும், கோயில் நிர்வாகத்தினரும் இணைந்து உழவாரத் திருப்பணியை மேற்கொண்டனர். காஞ்சி பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரசுவதி சுவாமிகள் இத்திருக்கோயிலுக்கு விஜயம் செய்து அருளுரையாற்றி, ஆசிகளை வழங்கித் திருப்பணிகளைத் துவக்கி வைத்தார். கடந்த 10.11.2019 -இல் குடமுழுக்கு விமரிசையாக நடைபெற்றது.
நந்தி மீது அமர்ந்த கோலம்: கருவறையில் இறைவன் உமையுடன் நந்தியின் மீது அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். கருவறை முன் மண்டபத்தில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான், வற்றாத செல்வம் வழங்கும் குபேரரைக் கண்டு வழிபடலாம்.
அழகிய சிற்ப வடிவங்கள்: நுழைவு வாயில் மண்டபத்தின் தூண்களில், கண்ணப்பர் வரலாறு, காமாட்சி அம்மன் வழிபாடு, இறைவனை அடியவர் வழிபடும் காட்சி கள் அழகாகக் காட்சியளிக்கின்றன.
அணையா தீபம்: கோயிலுக்கு மேற்கே அகத்தியருக்கு தனி சந்நிதி ஏற்படுத்தப்பட்டு, வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. இங்கு தீபம் எப்பொழுதும் எரிந்து கொண்டிருக்கும். மன அமைதி வேண்டுவோர் இங்கு அமர்ந்து தியானம் செய்யலாம்.
வளமான வாழ்க்கைக்கு வேண்டிய பதும நிதி, மகா பதும நிதி, சங்க நிதி, மகர நிதி, கச்சப நிதி, கற்ப நிதி, நந்த நிதி, நீல நிதி, முகுந்த நிதி ஆகிய நவநிதிகளையும் அளிக்கும் நவநிதீசுவரரையும், அம்பிகை செல்வநாயகியையும் வழிபட்டு நலமடைவோம்.
இக்கோயிலின் வடகிழக்குப் பகுதியில் அலங்கார வேலைப்பாடுகள் நிறைந்த பைரவர் சந்நிதி அமைக்கும் பணி தற்பொழுது நடைபெற்று வருகிறது. இத்திருக்கோயில் திருப்பணிக்கும், சிறப்பான வழிபாட்டிற்கும் பக்தர்கள் உதவி செய்யலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னையில் 1 மணி வரை 54.58% வாக்குப்பதிவு!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 1 மணி நிலவரம்! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 41.11% வாக்குப்பதிவு- நேரலை

மேற்கு வங்கம்: பிற்பகல் 1 மணி வாக்குப்பதிவு நிலவரம்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

