கல்விக்கடவுளான சரஸ்வதி தேவி சிவாலயங்களில் தனி சந்நிதி பெற்றும், சில தலங்களில் துர்கா, லஷ்மி, சரஸ்வதி என்று முப்பெரும் தேவிகளாகவும் எழுந்தருளியுள்ளாள். வெகு சில இடங்களிலேயே தனி ஆலயங்கள் உள்ளன. அவ்வரிசையில் சென்னைக்கு அருகில் கலைமகளுக்கு ஒரு தனி ஆலயம் அமைந்துள்ளது. கூத்தனூரை அடுத்து சரஸ்வதி தேவிக்கு அமைந்த இரண்டாவது தனிக்கோயில் என பெருமையாகப் பேசப்படுகின்றது.
சென்னை பெரம்பூர் பகுதியிலிருந்து பல ஆண்டுகளாக திருமலை திருப்பதிக்கு பாத யாத்திரையாக செல்லும் சிவா விஷ்ணு சேவார்த்திகள் சங்கம் என்ற அமைப்பைச் சேர்ந்த அன்பர்கள் தங்கள் பயணத்தின் போது இளைப்பாறும் பொருட்டு பெரியபாளையத்திலிருந்து ஊத்துக் கோட்டை செல்லும் வழியில் உள்ள அரியப்பாக்கம் கிராமத்தில் வயல்கள் நடுவே உள்ள ஓர் இடத்தில் தங்குவது வழக்கம். அந்த இடத்திலேயே சரஸ்வதி தேவிக்கு அபூர்வமாக ஓர் ஆலயம் கட்ட தீர்மானித்து, அடுத்து வந்த வருடங்களில் அதை முறைப்படி செயல்படுத்தி, கடந்த 2015 -ஆம் வருடம் மே 1- ஆம் தேதி குடமுழுக்கு வைபவத்தை இனிது நடத்தினர். மேலும், ஆலய நிர்வாகங்களை திறம்பட நடத்துவதற்கு வித்யாரம்ப ஞானமகாசரஸ்வதி டிரஸ்ட் என்ற அமைப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கருவறையில் பீடத்துடன் சுமார் 8 அடி உயரத்தில் அமர்ந்த கோலத்தில் அபயவரத ஹங்தங்களுடன், பின் கரங்களில் ஜபமாலை, ஏட்டுச் சுவடிகள் தாங்கி, வலது காலை மடித்துக் கொண்டு மடியில் வீணையுடன் ஞானசரஸ்வதி என்ற திருநாமம் கொண்டு அருளும் நான்முகனின் நாமகள் காட்சி தரும் அழகை இன்றைக்கெல்லாம் சேவித்துக்கொண்டே இருக்கலாம். இவ்வாலயத்தில் நவராத்திரி விழா அக்டோபர் 10 - இல் தொடங்கி தினசரி அபிஷேகம், அலங்காரம், சகஸ்ரநாம பாராயணங்களுடன் நடந்து வருகிறது. அக்டோபர் 19 - விஜயதசமி. அன்று கல்வி பயில தொடங்கும் குழந்தைகளுக்கு அட்சராப்பியாசம் வைபவம் நடைபெற உள்ளது. பேச்சுத்திறன் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு அம்பாளை வேண்டிக் கொண்டு வெள்ளி ஊசியால் நாக்கில் எழுதப்படும். அன்று முழுவதும் பக்தர்கள் பங்கேற்கலாம். அர்ச்சனைப் பொருட்களுடன் அவசியம் தேன் வாங்கி வரவேண்டும்.
பெரியபாளையத்திலிருந்து 1 கி.மீ தூரத்தில் இந்த ஆலயம் உள்ளது.
தொடர்புக்கு: ஆலய அர்ச்சகர்: 91235 82605 / 98408 77018.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை விரும்பும் மக்கள்: சந்திரபாபு நாயுடு

‘எக்ஸ்’ தளத்தில் ஆபாச உள்ளடக்கம்: எலான் மஸ்குக்கு பிரான்ஸ் அழைப்பாணை

அடுக்குமாடி குடியிருப்புகளில் பாமக வேட்பாளா் பாலு பிரசாரம்!

தெற்கு லெபனானில் சிலுவை அவமதிப்பு: இஸ்ரேல் வீரருக்கு வலுக்கும் கண்டனம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


