பைராகி மடத்தில் பிரம்மோற்ஸவம்
மனித இனத்தை உய்விக்கும் பொருட்டு பல்வேறு இடங்களில் கோயில் கொண்டு அருள்புரிகிறான் பரந்தாமன்.


மனித இனத்தை உய்விக்கும் பொருட்டு பல்வேறு இடங்களில் கோயில் கொண்டு அருள்புரிகிறான் பரந்தாமன். அவ்வகையில் சென்னை, சௌகார்பேட்டையில், ஜெனரல் முத்தையா தெருவில் பைராகி மடத்தைச் சேர்ந்த அருள்மிகு திருவேங்கடமுடையான் வேங்கடேசப் பெருமாள் திருக்கோயில் உள்ளது. இங்கே அக்: 3 முதல் அக்: 14 வரை பிரம்மோற்ஸவம் நடக்கிறது. அக்: 13 அன்று காலை 9 மணிக்கு பல்லக்கு உற்ஸவமும், இரவு 8 மணிக்கு மங்களகிரி விமான úஸவையும் நடக்கின்றன.
எழுத்தின் மூலம் "ஓம்' என்னும் பிரணவம். அதுவே அகாரம், உகாரமான இரண்டாகவும் உள்ளது. அந்த மூல எழுத்தான "ஓம்' என்னும் பிரணவ ஸ்வரூபியாக இருப்பவள் உமையவள். மூல மந்திரமாக இருக்கும் அவள், அதில் அகாரம், உகாரம் இரண்டுமாகவும் உள்ளாள். அவளே இரண்டாகி வளர்ந்து ஐந்தாக பஞ்சாக்ஷசரமாகி, மேலும் வளர்ந்து அஷ்டாக்ஷமாகவும் ஒளிர்விடுகிறாள். இப்படி மந்திரஸ்வரூபமாக உள்ள தாய் வானமாய், வளியாய், கனலாய், வனமாய் இந்த பூமியாய் பஞ்ச பூதங்களாகவும் திகழ்கிறாள்.
முனிவர்கள் வேதம் ஓதியே வழிபாடு செய்து, இறைவனை வேத ஒலியில் கண்டு மகிழ்வார்கள். ருக், யஜுர், சாமம், அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களின் வேராகவும், அதன் கிளைகளாகவும் அதன் கொழுந்தாகவும் இருப்பவள் அன்னை பராசக்தி. அவ்வாறு இருக்கும் அவளை லலிதா சகஸ்ரநாமம் "வேதஜனனி' என்கிறது.
அவள் வேதங்களாக இருப்பது மட்டுமல்லாமல் அறுவகை சாத்திரங்களாகவும் இருக்கிறாள். தர்க்கம், வியாகரணம், மீமாம்சை, சந்தோபிசிதி, நிருத்தம், ஜோதிடம் ஆகிய அறுவகை சாத்திரங்களும் அவளே! அதுமட்டுமல்ல, மனித உள்ளங்களை நெறிப்படுத்தி, வாழ்க்கையை முறைப்படுத்தி, பரிபூரண ஆனந்தத்தை அளிப்பதற்காகவே தோன்றிய 18 புராணங்கள், ஆகமங்களாகவும் அவளே திகழ்கிறாள்.
இவ்வாறு அனைத்துமாக உள்ள பராசக்தி சிறப்பாக உலகைப் படைக்கும் தொழிலை பிரம்மனுக்குக் கொடுத்திருக்கிறாள். அதேபோல படைக்கப்பட்டவைகளைக் காக்கும் பொறுப்பை தனது சகோதரன் திருமாலிடமும், உரிய காலத்தில் சம்ஹாரம் செய்யும் பொறுப்பை தனது துணைவன் சிவபெருமானிடமும் ஒப்படைத்திருக்கிறாள்.
இவ்வாறு பணிகள் செய்ய ஆட்களை நியமிக்கும் எஜமானியாக, உலக சாம்ராஜ்யத்தின் அரசியாகத் திகழும் அன்னை பராசக்தி, இந்தப் பணிகளைச் செய்யும் பொறுப்பை அவர்களுக்குக் கொடுத்தாலும், அந்தச் செயல்களைச் செய்யும் சக்தியாகவும் அவளே இருக்கிறாள். இவ்வளவு வேலைகளை எல்லாம் செய்பவள் யார் தெரியுமா? சொல்கிறார் அபயாம்பிகைப்பட்டர்.
மேலும், சிவபெருமானுக்கு ஐந்து (ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோத்ஜாதம்) முகங்கள் உண்டு. ஐயனைப் போலவே அம்பிகைக்கும் ஐந்து முகங்கள் என்பர். ஆனால் இவரோ, "ஐயனுக்கு ஐந்து முகங்கள்தான் உண்டு; ஆனால் அம்மைக்கோ ஒன்பது முகங்கள் உண்டு'' என்கிறார். அதாவது, வாமை, ஜேஷ்டை, ரெüத்திரி, காளி, கலவிகரணி, பலவிகரணி, பலப்பிரதமணி, சர்வபூததமனி, மனோன்மணி ஆகிய ஒன்பது சக்திகளாய் இருக்கும்போது ஒன்பது முகங்களை உடையவளாகத் தோன்றுகிறாளாம் தாய். இதை இரண்டாவது பாடல்,
"அஞ்சு முகத்தி நவமுகத்தி
ஆறு முகத்தி சதுர்முகத்தி
அலையில் துயிலும் மால்முகத்தி
அருண முகத்தி அம்பரத்தி
பஞ்சா க்ஷரத்தி பரிபுரத்தி
பாசாங் குசத்தி நடுவனத்தி
பதுமா சனத்தி சிவபுரத்தி
பாரத் தனத்தி திரிகுணத்தி
கஞ்ச முகத்தி கற்பகத்தி
கருணா கரத்தி தவகுணத்தி
கயிலா சனத்தி நவகுணத்தி
காந்தள் மலர்போல் சதுர்கரத்தி
மஞ்சு நிறத்தி பரம்பரத்தி
மதுரச் சிவத்தி மங்களத்தி
மயிலா புரியில் வளரீசன்
வாழ்வே அபயாம் பிகைத்தாயே!''
என அற்புதமாகப் போற்றுகிறது.÷
200 ஆண்டுகளுக்கு முன் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள நல்லத்துக்குடி என்ற கிராமத்தில் பிராமணக் குலத்தில் பிறந்த கிருஷ்ணசாமி, இளமையிலேயே தாய்-தந்தையரை இழந்தவர். துக்கம் தாளாமல் "அம்மா' என்று அவர் கதறி அழுதபோது, அன்னை அபயாம்பிகை ஓர் அந்தணப் பெண் உருவில் இவர்முன் தோன்றி, "மைந்தா! அழாதே, இதைச் சாப்பிடு!' என்று உணவு படைத்து மறைந்தாள். அது முதல் கிருஷ்ணசாமி ஐயர் அம்பிகையை தரிசித்து வந்தார்.
ஒரு நாள் இரவு அர்த்தசாம தரிசனம் செய்துவிட்டு வீட்டிற்குத் திரும்பும்போது, இருட்டில் கல் இடறி விழுந்தவர், வலி பொறுக்காமல் ""அம்மா... அம்மா..'' என்று அலறியபோது, அன்னை அபயாம்பிகை அவர் கரம் பற்றித் தூக்கிவிட்டு, ஒரு கை விளக்குடன், நல்லத்துக்குடியில் உள்ள அவரது வீடு வரை வந்து வழி காட்டினாள். அன்று முதல் இவர் ஒவ்வொரு நாளும் அர்த்தசாம பூஜை முடிந்து வீடு திரும்பும்போது, ஆள் யாரும் இல்லாது ஒரு கைவிளக்கு மட்டும் இவருக்கு முன் சென்று வழிகாட்டி மறையும்.
அன்னையின் இக்கருணையை எண்ணி உருகிய கிருஷ்ணசாமி ஐயர் ""தாயே, உன் கருணைக்கு யாது செய்வேன்?'' என்று புலம்ப, ""செந்தமிழில் என் சிந்தை குளிரச் செய்வாய்'' என அன்னை அசரீரியாகக் கூறினாள். உடனே அன்னையை எண்ணி காப்புச் செய்யுளைத் தவிர 100 பாடல்களை இயற்றினார். அதுதான் "ஸ்ரீ அபயாம்பிகை சதகம்' எனப் பெயர்பெற்றது. கிருஷ்ணசாமி ஐயர் அன்றிலிருந்து அபயாம்பிகைப்பட்டரானார். 1989-இல் முதல் பதிப்பு கண்ட இப்பனுவலுக்கு உரை வகுத்தவர் மாயூரம் வி.தண்டபாணி.
அற்புதமான இந்த சதகத்தில் உள்ள 12-ஆம் பாடலின் பொருள்தான் மேலே கண்டது. அவருடைய பாடல்களில் திருவள்ளுவர், பட்டினத்தார், திருமூலர், அபிராமிப்பட்டர், மாணிக்கவாசகர், அப்பர், வள்ளலார் முதலிய அருளாளர்களுடைய பாடல்களின் தாக்கம் காணப்படுவதை ஆழ்ந்து கற்போர் உணர்வர்.. மேற்குறித்த பொருளுக்கான பாடலைக் காண்போம்.
""வன்னம் ஒன்றாய் இரண்டாகி
வளர்ந்தோ ரைந்தாய் எட்டாகி
வானாய் வானின் வளிக்கனலாய்
வனமாய்ப் பாராய் வகைஐந்தாய்ப்
பன்னும் மறையோர் நான்காகிப்
பரந்த சாத்ர முடன்ஆறாய்ப்
பதினெண் புராண ஆகமங்கள்
பரிந்தோ ரிருபத் தெட்டாகி
உன்னி நெடுமால் அயனாலும்
உலகை வகுக்கக் காப்பாற்ற
உடனே சங்கா ரித்திடவும்
உமையா ளொடுதன் கேள்வனுமாய்
மன்னி நிதமும் ஆட்டிவைத்த
மதலாய் இமவா னுடைமகளாய்
மயிலா புரியில் வளரீசன்
வாழ்வே அபயாம் பிகைத்தாயே!''
"இவ்வளவு வேலைகளையும் செய்பவள், இமவானுடைய புதல்வியாகத் தோன்றியவளும் மயிலாடுதுறையில் கோலோச்சும் சிவபெருமான் மயூரநாதனின் மனைவியும், அடியார்களுக்கு அபயமளிக்கும் அஞ்சல் நாயகியான அன்னை அபயாம்பிகையே!' என்கிறார் அபயாம்பிகைப்பட்டர்.
எதுகை, மோனை, சொற்சுவை, பொருட்சுவை, கவிச்சுவை யாவும் அமையப்பெற்ற } அன்னை அருள்பெற்ற சதகம் இது. இதில் அன்னையின் திருவுரு, யோகம், சைவசித்தாந்தம், யாக்கை, நிலையாமை போன்றவை குறிக்கப்படுகின்றன. ஆதிசங்கரரின் செüந்தர்யலஹரி, அபிராமிபட்டரின் அபிராமி அந்தாதி ஆகிய நூல்கள் வரிசையில் வைத்துப் போற்றப்பட வேண்டிய அற்புதமான படைப்பு இது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...