இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்று உலக அளவில் பிரபலம் அடைந்தவர்கள் பலர். இவர்களில் பலர் அதிகம் படித்தவர்கள். சிலரின் கல்வித் தகுதியை அறிவோம்.
அனில் கும்ப்ளே:
சுழற்பந்து வீச்சாளரான இவர், இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் மொத்தம் 619 விக்கெட்டுகளை எடுத்தவர். ஆப்பிள், ஜம்போ என்ற செல்லப் பெயர்கள் உண்டு. பி.இ. இயந்திரவியல் படித்தவர்.
ஆவிஸ்கர் சால்வி:
வேகப் பந்து வீசும் திறமையும், பேட்ஸ்மேன் தகுதியையும் பெற்றவர். புதுச்சேரி, பஞ்சாப் அணியின் பயிற்சியாளராக இருந்த இவர், தற்போது ஓமன் அணியின் பயிற்சியாளர். 'ஆஸ்டிரோ பிசிக்ஸ்' பிரிவில் முனைவர் பட்டம் படித்தவர்.
சூர்ய குமார் யாதவ்:
இந்தியா 20/20 கிரிக்கெட் அணியின் இன்றைய கேப்டன். வணிகவியல் படித்தவர்.
ரவிசந்திரன் அஸ்வின்:
இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து அண்மையில் ஓய்வு பெற்றவர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மீண்டும் ஆடப் போகிறார். .பி.டெக் (இன்பர்மேஷன் டெக்கனாலஜி படித்தவர்.
முரளி விஜய்:
தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர், டெஸ்ட் போட்டிகளில் ஒபனிங் பேட்ஸ்மேனாக ஆடியவர். சென்னை சூப்பர் கிங்ஸிலும் ஆடியவர். எம்.ஏ. பொருளாதாரம் படித்தவர்.
ராகுல் டிராவிட்:
'சுவர்' என பிரபலமாக அழைக்கப்பட்டவர். இந்திய அணியில் சிறப்பாக விளையாடி பின்னர், பயிற்சியாளராக வலம் வந்தவர். வணிகவியல் படித்தவர்.
ஜவகல் ஸ்ரீநாத்:
இந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளர். என்ஜினீயரிங் படித்தவர்.
கே.ஸ்ரீகாந்த்:
கவாஸ்கருடன் பல போட்டிகளில் தொடக்க வீரராக களம் இறங்கிய இவர், இந்திய அணியின் கேப்டனாக இருந்தவர். பின்னர், செலக்டர். இன்று கமென்டேட்டர். பி.இ. மின்னியல் படித்தவர்.
கங்குலி:
தொடக்க வீரர், சிறந்த கேப்டன், செலக்டர், காமன்டேட்டர் என பன்முகத் தன்மைகளைக் கொண்ட இவர், ஐ.ஐ.எம்.-இல் மேனேஜ்மென்ட் கோர்ஸ் படித்தவர்.
ரவி சாஸ்திரி:
ஆல் ரவுண்டராக இருந்து ஓய்வு பெற்ற இவர், இன்று வரை கமென்டேட்டராக இருக்கிறார். வணிகவியல் படித்தவர்.
வெங்கடேஷ் ஐயர்:
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு ஆடுபவர். சிறந்த பேட்ஸ்மேன். இந்த ஆண்டு ஐ.பி.எல். ஏலத்தில் மிக அதிக விலைக்கு எடுக்கப்பட்டவர்களில் ஒருவர்.எம்.பி.ஏ., முடித்த இவர், நிதியியலில் முனைவர் பட்டம் பெற்றவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டாப் ஆர்டரில் கலக்கும் இளம் இந்திய வீரர்கள்; ரிக்கி பாண்டிங் பாராட்டு!

ஐபிஎல் தொடங்கியதில் இருந்து விளையாடும் 4 வீரர்கள்! யார்யார்?

'2024' அனுபவ ஆட்டத்தின் வெற்றி; '2026' இளமை அதிரடியின் வெற்றி

குல்தீப் யாதவ் திருமண ஆல்பம்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


