ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் இருந்து தற்போது வரை நான்கு வீரர்கள் மட்டுமே விளையாடி வருகிறார்கள்.
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) டி20 கிரிக்கெட் தொடரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) நடத்தி வருகின்றது.
ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் வருகின்ற மார்ச் 28 ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி திடலில் தொடங்கவுள்ளது.
இந்த நிலையில், ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் இருந்து 19-வது சீசன் வரை 4 வீரர்கள் மட்டுமே தொடர்ந்து அனைத்து சீசன்களிலும் விளையாடி வருகிறார்கள்.
மகேந்திர சிங் தோனி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தொடர்ந்து 19-வது ஆண்டாக ஐபிஎல் தொடரில் விளையாடவுள்ளார்.
44 வயதாகும் தோனி, தற்போதை ஐபிஎல் வீரர்களில் மிகவும் வயதான வீரராக உள்ளார்.
சிஎஸ்கேவுக்கு தடை விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளை தவிர்த்து, 2008 முதல் அந்த அணிக்காக விளையாடி வரும் தோனி, கேப்டனாக 5 ஐபிஎல் கோப்பைகளையும், 2 சாம்பியன்ஸ் லீக் கோப்பைகளையும் வென்று கொடுத்திருக்கிறார்.
ரோஹித் சர்மா
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவும் 2008 முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார்.
2008 முதல் 2010 வரை டெக்கன் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடிய ரோஹித் சர்மா, 2011 முதல் தற்போது வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
இவர், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக 5 முறை கோப்பை வென்று கொடுத்துள்ளார்.
விராட் கோலி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, 2008 முதல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக மட்டுமே விளையாடி வருகிறார்.
ஐபிஎல் தொடரில் 8,600-க்கும் அதிகமான ரன்கள் குவித்து, பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார்.
மணீஷ் பாண்டே
இந்திய கிரிக்கெட் வீரரான மணீஷ் பாண்டேவும் 2008 முதல் பல்வேறு அணிகளுக்காக ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.
ஐபிஎல் தொடரில் 2009 ஆம் ஆண்டு பெங்களூரு அணிக்காக களமிறங்கிய மணீஷ் பாண்டே, சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார்.
Summary
4 players who have been playing in the IPL since its inception! Who are they?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொடர் தோல்விகளால் வீரர்கள் சோர்வடைந்துவிட்டனர்: சிஎஸ்கே பயிற்சியாளர்

தில்லி பந்துவீச்சு: முதல் வெற்றிக்கான தேடலில் குஜராத்!

ஐபிஎல் தொடரிலிருந்து ஆர்சிபி வேகப் பந்துவீச்சாளர் விலகல்!

ஐபிஎல் 2026: முதல் போட்டியில் மோதும் சிஎஸ்கே, ஆர்சிபி?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



