மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தினேஷ் கார்த்திக் - தீபிகா தம்பதிக்கு 3-வது குழந்தை!

தினேஷ் கார்த்திக் - தீபிகா தம்பதிக்கு 3-வது குழந்தை பிறந்திருப்பது பற்றி...

News image

தினேஷ் கார்த்திக் - தீபிகா - Photo: Instagram / Dinesh Karthik

Updated On :20 மார்ச் 2026, 5:39 am

இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் - ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிகல் ஜோடிக்கு மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான தினேஷ் கார்த்திக், தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பேட்டிங் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார்.

இவர், கடந்த 2015 ஆம் ஆண்டு பிரபல ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிகல்லை காதல் திருமணம் செய்துகொண்டார்.

இந்த தம்பதிக்கு கபீர், ஜியான் என்ற இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளன. தற்போது மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

பெண் குழந்தை பிறந்த செய்தியை தனது சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்திருக்கும் தினேஷ் கார்த்திக், குழந்தைக்கு ராஹா பல்லிகல் கார்த்திக் எனப் பெயர் சூட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Story image

தினேஷ் கார்த்திக்கின் பதிவுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்களும், அவரது ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Summary

Third child born for Dinesh Karthik and Deepika!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.