ஐபிஎல் தொடரில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் வேகப்பந்து வீச்சாளர் நாதன் எல்லிஸ் காயம் காரணமாக விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 19-வது தொடர் வருகிற 28 ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் திடலில் தொடங்குகிறது. கோலகலமாகத் தொடங்கும் இந்தத் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் பெங்களூரு அணியும் முன்னாள் சாம்பியன் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.
ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் 8 நாள்களே இருக்கும் நிலையில், அணிகள் ஒவ்வொன்றாக பயிற்சியை தொடங்க ஆரம்பித்துவிட்டன. வெளிநாட்டு வீரர்கள் தங்களது அணிகளுடன் இணைந்து பயிற்சியைத் தொடங்க தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில், ஐபிஎல் தொடருக்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு பெரும் பின்னடைவாக முன்னனி வேகப்பந்து வீச்சாளர் நாதன் எல்லிஸ், காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.
உலகின் தலைசிறந்த டி20 பந்துவீச்சாளர்களில் ஒருவரான, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் நாதன் எல்லிஸுக்கு, தொடை தசைநார் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் ஐபிஎல் தொடருக்குள் குணமடைய மாட்டார் என்றும் சிஎஸ்கே அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பிக்பாஸ் லீக்கில் சிட்னி சிக்ஸர்ஸ் அணி பல முறை கோப்பைகளை வெல்ல பெரிதும் உதவிய நாதன் எல்லிஸ், மேட் ஹென்றி, கலீல் அகமதுடன் இணைந்து பந்துவீசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் தொடரில் இருந்து விலகியது பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது.
இதுகுறித்து சிஎஸ்கே தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறுகையில், “இது எங்களுக்கு ஒரு பெரிய பின்னடைவு. எல்லிஸ் ஒரு முக்கியமான பந்துவீச்சாளர். குறிப்பாக இறுதி ஓவர்களில் நன்றாக பந்து வீசுவார். நாங்கள் மாற்று வீரர்களைத் தேடிக்கொண்டிருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
Summary
Chennai Super Kings have been dealt a major blow ahead of the Indian Premier League 2026 season. CSK’s death-overs specialist Nathan Ellis, one of the best T20I bowlers in the world, has been ruled out of the tournament.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐபிஎல் தொடரிலிருந்து கலீல் அகமது விலகல்..! சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி!

சிஎஸ்கே பேட்டிங்; 2-வது வெற்றி கிடைக்குமா?

தொடர் தோல்விகளால் வீரர்கள் சோர்வடைந்துவிட்டனர்: சிஎஸ்கே பயிற்சியாளர்
லக்னௌ வீரர் ஹசரங்கா விலகல்! மாற்றுவீரர் யார் தெரியுமா?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


