மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

'2024' அனுபவ ஆட்டத்தின் வெற்றி; '2026' இளமை அதிரடியின் வெற்றி

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 2026-இல் கிடைத்த வெற்றி இளம் அதிரடி வீரர்களின் இந்திய அணிக்கானது என்று இந்திய கேப்டன் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறினார்.

News image

டி20 உலகக் கோப்பையுடன் சூர்யகுமார் யாதவ். - படம்: ஏபி

Updated On :17 மார்ச் 2026, 10:12 pm

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், 2024-இல் கிடைத்த வெற்றி அனுபவமிக்க வீரர்களின் இந்திய அணிக்கானது என்றும், 2026-இல் கிடைத்த வெற்றி இளம் அதிரடி வீரர்களின் இந்திய அணிக்கானது என்றும் இந்திய கேப்டன் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறினார்.

அண்மையில், இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா சாம்பியன் ஆனது. கோப்பையைத் தக்கவைத்த முதல் அணி, சொந்த மண்ணில் கோப்பை வென்ற முதல் அணி, 3 முறை கோப்பை வென்ற ஒரே அணி ஆகிய சாதனைகளை இந்தியா படைத்தது.

இந்நிலையில், அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், "பிடிஐ' செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

2024, 2026-இல் டி20 உலகக் கோப்பை வென்ற இரு இந்திய அணிகளுக்குமே சிறு வித்தியாசம் உள்ளது. 2024-இல் கோப்பை வென்றது, அனுபவமிக்க வீரர்கள் அடங்கிய இந்திய அணியாகும். இந்த முறை கோப்பை வென்றிருப்பது, இளம் அதிரடி வீரர்கள் இருக்கும் இந்திய அணியாகும்.

அப்போது அணியில் இருந்த வீரர்கள் தங்களுக்கான பணி என்ன என்பதை மிகத் தெளிவாக அறிந்திருந்தனர். அனுபவம் அவர்களுக்கு அந்தத் திறமையை அளித்திருந்தது. இந்த முறை இந்திய அணியில் அனுபவ வீரர்கள் குறைவாக இருந்தாலும், உத்வேகமிக்க, தீவிரமான வீரர்கள் இருந்தது சாதகமாகும்.

அனைவருமே 25-27 வயதுடையவர்கள். சொந்த மண்ணில் உலகக் கோப்பை வெல்லும் உணர்வு எப்படி இருக்கும் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டியிருந்தது. சொந்த மண்ணில் விளையாடும்போது எதிர்பார்ப்புகளால் ஏற்படும் அழுத்தத்தை உணர்ந்து விளையாட வேண்டியிருந்தது. அது தவிர, திறமை அடிப்படையில் இரு அணிகளிலுமே பெரிதாக வித்தியாசம் இருக்கவில்லை.

2024-இல் அணியில் ஒரு வீரராக இருந்தபோதும், 2026-இல் அணியின் கேப்டனாக இருக்கும்போதும் எனது உணர்வுகள் ஒரே மாதிரியாகத் தான் இருந்தன. சொந்த மண்ணில் விளையாடுவதால், கோப்பை வென்றாக வேண்டும் என்ற எண்ணம் மிகுந்திருந்தது என்றார் சூர்யகுமார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.