தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஒரே நேரத்தில் 2, 3 இந்திய அணிகளை விளையாட வைக்கலாம்..! சூர்யகுமார் அதிரடி கருத்து!

டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேசியது குறித்து...

News image

டி20 உலகக் கோப்பையுடன் சூர்யகுமார் யாதவ். - படம்: ஏபி

Updated On :16 மார்ச் 2026, 9:31 am

டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், “ஒரே நேரத்தில் பல இந்திய அணிகள் டி20 போட்டிகளில் விளையாடும் அளவுக்கு நம்மிடம் திறமைசாளிகள் இருக்கிறார்கள்” எனக் கூறியுள்ளார்.

இந்திய அணி கடந்த மார்ச். 8ஆம் தேதி அகமதாபாத் திடலில் நியூசிலாந்தை வீழ்த்தி 3-ஆவது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்தது.

2024 டி20 உலகக் கோப்பையை வென்றதும் ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்ததால், சூர்யகுமார் கேப்டனாகப் பொறுப்பேற்றார். 2026 உலகக் கோப்பை வென்றுள்ள சூர்யகுமார் யாத , பிடிஐ உடனான பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசியிருப்பதாவது:

திறமையைப் பற்றி பேச வேண்டுமானால், இந்தியாவுக்குத் தொடர்ச்சியாக கிடைத்துக்கொண்டே இருக்கும். ஐபிஎல் கிரிக்கெட் இருக்கிறது, கிளப் கிரிக்கெட் இருக்கிறது, உள்ளூர் போட்டிகளும் இருக்கின்றன.

ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு வீரர்கள் வருகிறார்கள் என்பதைப் பார்க்கிறோம். அதனால், நான் டி20 பற்றி பேசும்போதே கூட டி20க்கு அணிகளைத் தேர்வு செய்யலாம். அதனால், திறமைக்கு பஞ்சமில்லை. ஒரே நேரத்தில் 2, 3 பிளேயிங் லெவனை உருவாக்கி விளையாட வைக்கலாம். இந்த உண்மையைச் சொல்வதில் எனக்கு வெட்கமில்லை என்றார்.

Summary

No shame in saying that India can field multiple T20 teams: Suryakumar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.