பஞ்சாப் கிங்ஸ் அணியின் டாப் ஆர்டரில் உள்ள இளம் இந்திய வீரர்கள் மிகவும் திறமையானவர்கள் என அந்த அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் பாராட்டியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் நேற்று (ஏப்ரல் 3) நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியில், டாப் ஆர்டர் பேட்டர்களான பிரியன்ஷ் ஆர்யா 39 ரன்கள் (11 பந்துகளில்), பிரப்சிம்ரன் சிங் 43 ரன்கள் (34 பந்துகளில்), ஷ்ரேயாஸ் ஐயர் 50 ரன்கள் (29 பந்துகளில்) எடுத்து அணியின் வெற்றி உதவினர்.
இந்த நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் டாப் ஆர்டரில் விளையாடும் வீரர்கள் மிகவும் திறமை வாய்ந்தவர்கள் எனவும், உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வீரர்களை வைத்து பஞ்சாப் அணியை கட்டமைத்துள்ளதாகவும் அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: டாப் ஆர்டரில் விளையாடும் இளம் இந்திய வீரர்கள் மிகவும் சிறப்பானவர்கள். இளம் இந்திய வீரர்கள் மற்றும் ஆஸ்திரேலிய வீரர்கள் சிலரை வைத்து பஞ்சாப் கிங்ஸ் அணியை மீண்டும் கட்டமைத்துள்ளோம். ஐபிஎல் ஏலத்தில் எங்களது திட்டம் தெளிவாக இருந்தது. பிரப்சிம்ரன் மற்றும் ஷஷாங் சிங்கை தக்கவைத்தன் மூலம், நான் எந்த வீரர்களுடன் பஞ்சாப் அணி கட்டமைக்கப்பட வேண்டும் என நினைத்தேனோ அந்த வீரர்களை வாங்க முடிந்தது.
அந்த வரிசையில் முதலிடத்தில் ஷ்ரேயாஸ் ஐயர்தான் இருந்தார். அதே நேரத்தில், தரமான இந்திய வீரர்களை அணியில் இடம்பெற செய்வது மிகவும் முக்கியமான விஷயமாக இருந்தது. அந்த வகையில் அர்ஷ்தீப் சிங் மற்றும் யுஸ்வேந்திர சஹால் ஆகியோர் அணியில் இணைந்தனர் என்றார்.
ஐபிஎல் ஏலத்துக்கு முன்பாக பஞ்சாப் கிங்ஸ் அணியில் பிரப்சிம்ரன் சிங் மற்றும் ஷஷாங் சிங் மட்டுமே தக்கவைப்பட்டதால், அந்த அணி ரூ. 110.5 கோடி என்ற மிகப் பெரிய தொகையுடன் ஏலத்தில் பங்கேற்றது. இந்த தொகையின் மூலம், ஷ்ரேயாஸ் ஐயர், யுஸ்வேந்திர சஹால் மற்றும் அர்ஷ்தீப் சிங் போன்ற முக்கிய வீரர்கள் வாங்கப்பட்டனர்.
கடந்த ஐபிஎல் சீசனிலிருந்து ஷ்ரேயாஸ் ஐயர், யுஸ்வேந்திர சஹால் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் பஞ்சாப் கிங்ஸ் அணியின் மிக முக்கிய வீரர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Punjab Kings coach Ricky Ponting has praised the young Indian players in the team's top order, describing them as highly talented.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

லக்னௌவுக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங்!

தொடர் தோல்விகளால் வீரர்கள் சோர்வடைந்துவிட்டனர்: சிஎஸ்கே பயிற்சியாளர்

இளம் வீரர் பிரியான்ஷ் ஆர்யாவை பாராட்டிய புஜாரா!

மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக தில்லி கேபிடல்ஸ் டாப் ஆர்டர் சிறப்பாக செயல்படுமா?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



