எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

கோவையில் திருவள்ளுவர் இரும்புச் சிலை

திருவள்ளுவர் சிலை என்றாலே  உடனே நினைளக்கு வருவது குமரிக் கடலில்,  நீர் மட்டத்திலிருந்து 30 அடி உயரமுள்ள பாறை மீது அமைக்கப்பட்ட   133 அடி உயரச் சிலைதான்!

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 2:56 am

பிஸ்மி பரிணாமன்

திருவள்ளுவர் சிலை என்றாலே  உடனே நினைளக்கு வருவது குமரிக் கடலில்,  நீர் மட்டத்திலிருந்து 30 அடி உயரமுள்ள பாறை மீது அமைக்கப்பட்ட  133 அடி உயரச் சிலைதான்! தற்போது கோவையில்  இன்னொரு  வித்தியாசமான  சிலையாக  இரும்பில்  செய்யப்பட்ட தமிழ் எழுத்துகளால் உருவாகியுள்ளது. 

கோவை மாநகரை மேம்படுத்த  ரூ. 50 கோடி மதிப்பீட்டில்  "ஸ்மார்ட் சிட்டி' திட்டங்களின் ஒருபகுதியாக, கோவை - பொள்ளாச்சி சாலை வழியில் உள்ள குறிச்சிகுளம் உள்பட ஏழு பழமையான ஏரிகள்  புனரமைக்கப்பட்டுள்ளன.

ஏரிகளின்  முகப்பில் தமிழர் கலாசாரம், தமிழர்  பண்டிகைகளை  சித்திரிக்கும் வகையில் சிற்பங்களை நிறுவியுள்ளனனர். 

அத்தகைய  கலைச்  சின்னங்களில்,  சுமார்  335 ஏக்கர் பரப்பளள உள்ள   குறிச்சிக்குளத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் நீர் நுழைவாயிலின் நடுவில் கட்டப்பட்ட  ஒரு மேடையில்   சிலை நிறுவப்பட்டுள்ளது. 

ரளண்டானாவின் மையத்தில்   அமைந்துள்ள  திருவள்ளுவர் இரும்புச் சிலை 25 அடி உயரமும், 15 அடி அகலமும்,   இரண்டரை   டன் எடையும் கொண்டது.  

திருவள்ளுவர் எழுதிய 1,330 திருக்குறளை நினைள கூறும் வகையில்,  1330 தமிழ் எழுத்துகளைக் கொண்டு இந்தக்  கம்பீரமான சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
திருவள்ளுவர்  சம்மணமிட்டு அமர்ந்திருக்கும்   நிலையில் சிலை உருவாகியுள்ளது.

திருவள்ளுவரின் வலது  கையில்  "எழுத்தாணி',  இடது கையில்  "ஓலைச்  சுவடி' ஆகியவற்றை ஏந்தியிருக்கிறார்.   தமிழ் எழுத்துகளான 12  உயிர் எழுத்துகள், 18 மெய் எழுத்துகள், 216  உயிர்மெய் எழுத்துகள், ஒரு ஆயுத எழுத்து  என மொத்தம் 247  எழுத்துகளை இரும்பில் செய்து  அவற்றை ஒன்றுடன் ஒன்றை  "வெல்டிங்' முறையில்  மூலம் இணைத்து  திருவள்ளுவர் இரும்புச் சிலையை உருவாக்கியுள்ளனர்.

திறன் பெற்ற  கலைஞர்கள்,  பொறியாளர்கள் இணைந்து இந்தப் புதுமையான வள்ளுவர் சிலையை  வடிவமைத்துள்ளனர்.  இந்தப் பகுதியில்  நடைபயிற்சி  செய்யளம், சைக்கிள் ஓட்டளம்    தடங்கள்  அமைக்கப்பட்டுள்ளன.

நான்கு "ரகசிய' சொற்கள் சிலை வடிவமைப்பில் பயன்படுத்தியுள்ளனர்.   சிலை அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டதும், மறைந்திருக்கும்  அந்த சொற்களை  சரியாகச் சொல்லி பரிசுகள் பெற பொது மக்களுக்கு போட்டி ஒன்றும் அறிவிக்கப்பட உள்ளது.

திருவள்ளுவர் இரும்புச் சிலையின் நெற்றியில் "அறம்' என்ற சொல் பொருத்தப்பட்டுள்ளது. சிலையின் முன்  வள்ளுவரின்  முதல் திருக்குறளான  "அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதல் உலகு" எழுதப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.