தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

ஒன்றுமே இல்லாமல்  தொடங்கிய  வாழ்க்கை!

பேட்மின்டனில் ரியோ  ஜப்பான் ஒலிம்பிக்கில்  வெள்ளி,  வெண்கலம் என்று இரண்டு  பதக்கங்களைப்  பெற்று சாதனை புரிந்திருக்கும்  பி. வி. சிந்து,  2022-ஆம் ஆண்டு   காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் பெற்று பிரகாசித

News image
Updated On :5 மார்ச் 2023, 12:30 am

பேட்மின்டனில் ரியோ ஜப்பான் ஒலிம்பிக்கில் வெள்ளி, வெண்கலம் என்று இரண்டு பதக்கங்களைப் பெற்று சாதனை புரிந்திருக்கும் பி. வி. சிந்து, 2022-ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் பெற்று பிரகாசித்தார். அந்த ஆட்டத்தின்போது சிந்துவின் இடது பாதத்தில் உள்ளுக்குள் எலும்பு முறிய சிந்து சிகிச்சைக்காக ஐந்து மாதம் கட்டாய ஓய்வு எடுத்தார்.

சிந்து களத்துக்குத் திரும்பினாலும் முன்பு போல் சிறப்பாக விளையாட முடியவில்லை. துபையில் அண்மையில் நடைபெற்ற போட்டிகளில் தோல்வி அடைந்தார்.

"அண்மைக்காலமாக சிந்து சரிவர விளையாடாமல் போனதற்கு எனது பயிற்சி காரணமாக இருக்கலாம். சிந்துவும் வேறு பயிற்சியாளரிடம் பயிற்சி பெற விரும்புகிறார். அதனால் சிந்துவுக்குப் பயிற்சி கொடுக்கும் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறேன்' என்று பார்க் டே சாங் தெரிவித்துள்ளார். பார்க்கின் பயிற்சியில் சென்ற ஒலிம்பிக்கில் சிந்து வெண்கலப் பதக்கம் பெற்றிருந்தார்.

சிந்துவின் அடுத்த இலக்கு பாரிஸில் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் 2024-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள்தான். அதில், பதக்கம் பெறுவதில் முனைப்பாக இருக்கும் சிந்து தினமும் ஏழு மணி நேரம் இறக்கை பந்தாட்ட பயிற்சியில் ஈடுபட்டுவருகிறார். தனது பயிற்சி, லட்சியம் குறித்து சிந்து மனம் திறந்து கூறியதாவது:

""2024-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளுக்கு இன்னும் பல மாதங்கள் இருக்கின்றன. இதில் தகுதி பெற பல சுற்று ஆட்டங்களில் வெற்றி பெற வேண்டும். பேட்மின்டன் ஆட்டத்தில் உலகின் தர வரிசையில் முதல் 16 பேருக்குள் வர வேண்டும். அதற்கு தேவையான பயிற்சியும், உடல் வலுவும் தேவை. அதற்காகத்தான் தினமும் ஏழு மணி நேரம் பயிற்சியை மேற்கொண்டு வருகிறேன்.

எந்த விளையாட்டிலும் பயிற்சியாளருக்கும், பிஸியோதெரபிஸ்ட்டுக்கும் முக்கிய பங்கு உள்ளது.

ஒருநாளும் பேட்மின்டன் பயிற்சியை, உடற்பயிற்சியை செய்யாமல் இருக்க மாட்டேன். தோல்விகள் விளையாட்டில் தவிர்க்க முடியாதது. தோல்வி அடைந்தால் ஊடகங்கள் விமர்சிக்கும். விளையாட்டு ஆர்வலர்களும் பலவித கருத்துகளைப் பதிவு செய்வார்கள். அதுவும் தவிர்க்க முடியாதவை.

தோல்வி அடையும்போது எனக்கும் வருத்தமாக இருக்கும். மனம் தளர்ந்து போவேன். இவற்றை உதறிவிட்டு மீண்டும் பயிற்சியில் கவனம் செலுத்துவேன். தோல்வியை வெற்றியாக மாற்ற வேண்டும்.

பயிற்சி நேரத்தைத் தவிர வீட்டில் இருப்பதுதான் பிடிக்கும். பயிற்சிகள், பயணங்கள் என்று இருப்பதால் அதிக தோழிகள் இல்லை. வீட்டில் அக்கா மகனுடன் பேசி விளையாடி நேரத்தைக் கழிப்பேன். நான் வளர்க்கும் லாப்ரடார் நாயான "ரியோ' வுடன் நேரத்தைப் போக்குவேன். அடிக்கடி பயணம் மேற்கொள்ள வேண்டியிருப்பதால், வீட்டில் நான் இல்லாத நேரங்களில் "ரியோ' என்னை இழக்கும். எனது வருகைக்காக காத்திருக்கும். பயணம் முடிந்து வீடு வந்தால் என் மேல் "ரியோ' தாவும் . "ரியோ'வை கையில் எடுத்துக் கொள்ளும்வரையில் என்னைச் சுற்றி சுற்றி வரும்.

பிரபலமாகியிருப்பதால் கிடைக்கும் புகழ், மதிப்பு, அந்தஸ்து, மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் நான் வானத்தில் பறக்கவில்லை! தரையிலிருந்து எனது கால்கள் கழன்று கொள்ளவில்லை. அதற்குக் காரணம் பெற்றோர்கள் தந்த அறிவுரைகள்தான். "ஒன்றுமே இல்லாமல் தொடங்கிய வாழ்க்கை இது. அதனால் பழையதை மறந்துவிடாதே' என்பார்கள். அந்த அறிவுரைகளை நான் மறக்க மாட்டேன்'' என்றார் சிந்து.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.