மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

ஹெச். வினோத் இயக்கத்தில் கமல் 233

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான "விக்ரம்' படத்தின் பிரம்மாண்ட வெற்றியின் மூலம் கமலின் சினிமா பயணம் இன்னும் பரபரக்கிறது.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 1:01 pm

தினமணி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான "விக்ரம்' படத்தின் பிரம்மாண்ட வெற்றியின் மூலம் கமலின் சினிமா பயணம் இன்னும் பரபரக்கிறது. இந்த வெற்றியைத் தொடர்ந்து இளம் இயக்குநர்கள் பலரும் கமலின் அலுவலகம் வந்து கதை சொல்ல விரும்புகிறார்கள். அந்த வகையில் கடந்த 2018  ஆம் ஆண்டு ஷங்கரின் இயக்கத்தில் துவங்கப்பட்டு பின்பு பல பிரச்சனைகளால் கிடப்பில் போடப்பட்ட "இந்தியன் 2' படத்தை மீண்டும் துவங்கினார் கமல். மேலும் நடிப்பது மட்டுமல்லாமல் தன் ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பாக பல படங்களை தயாரிக்கவும் துவங்கினார்.அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஒரு படம், சிம்புவின் நடிப்பில் ஒரு படம் என இரு படங்களை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் தன் ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பாக உதயநிதியை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை தயாரிப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார் கமல். ஆனால் உதயநிதி அமைச்சரான பின்னர் இனி நடிக்கமாட்டேன் என முடிவெடுத்து கமலின் படத்தில் இருந்து விலகினார்.  

இந்நிலையில் தற்போது கமல் தன் அடுத்த படத்தின் அறிவிப்பை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இயக்குநர் ஹெச். வினோத்தின் இயக்கத்தில் தன் 233 ஆவது படத்தில் நடிக்கப்போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் கமல். இதைத் தொடர்ந்து ரசிகர்கள் சிலர் உதயநிதி நடிக்க வேண்டிய படத்தில் தற்போது கமலே சில மாறுதல்களை செய்து நடிக்க இருப்பதாக பேசி வருகின்றனர். ஆனால் இதில் எந்தளவிற்கு உண்மை உள்ளது என தெரியவில்லை. இருப்பினும் கமல் 233 திரைப்படம் உதயநிதி நடிக்கவேண்டிய படமாக கண்டிப்பாக இருக்காது என கூறி வருகின்றனர். ஏனென்றால் கமல் மற்றும் வினோத் இணைய இருப்பதாக கடந்த பல மாதங்களாகவே செய்திகள் வலம் வந்தன. அவ்வாறு இருக்கையில் இது உதயநிதி நடிக்கவேண்டிய படமாக இருக்காது என்பது உறுதியாகியுள்ளது. இந்தப் படத்தின் மற்ற துறைகளில் பணியாற்றவுள்ள கலைஞர்கள் மற்றும் படப்பிடிப்பு குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.