ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

நேதாஜியின் புகழ் போற்றி பாடல்

ஆர். எஸ். கார்த்திக் கதையின் நாயகனாக  நடித்து வரும் படம் "போர்குடி' . இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் "வீச்சருவா வீசி வந்தோம்..' எனத் தொடங்கும் பாடலுக்கான  விடியோ வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :6 நவம்பர் 2022, 12:30 am

ஆர். எஸ். கார்த்திக் கதையின் நாயகனாக  நடித்து வரும் படம் "போர்குடி' . இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் "வீச்சருவா வீசி வந்தோம்..' எனத் தொடங்கும் பாடலுக்கான  விடியோ வெளியிடப்பட்டுள்ளது.  இந்திய தேசிய ராணுவத்தை கட்டமைத்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களுக்கு அர்ப்பணிக்கும் வகையில் இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. 

இதில் ஆர். எஸ். கார்த்திக் ஜோடியாக ஆராத்யா நடிக்கிறார். இவர்களுடன் சங்கர் தாஸ், அருண்மொழி தேவன், மனோஜ் கண்ணன், செந்தில்குமரன், விஜயகுமார், ஜானகி அம்மாள் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ரமேஷ் ஏழுமலை ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு செந்தமிழ் இசையமைத்திருக்கிறார். படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேதாஜியின் புகழைப் போற்றும் விதமாக உருவாகியுள்ள இந்தப் பாடலை ஆர். தியாகு எழுதியிருக்கிறார்.  இந்த பாடலை,  வி. எம். மகாலிங்கம் மற்றும்  லட்சுமி ஜே.கே. ஆகியோர் பாடியிருக்கிறார்கள்.  

பாடலைப் பற்றி ஆர்.எஸ். கார்த்திக் பேசுகையில்.... ""ஒரு படத்தின் முகவரியாக அந்தப் படத்தில் இடம்பெறும் பாடல்கள் அமைந்திருக்கும். முன்னணி நட்சத்திர நடிகர்களின் படங்களிலிருந்து பாடல்கள் வெளியாகும் போது, அவை லிரிக்கல் விடியோவாக இணையத்தில் வெளியாகும்.  ஆனால் எங்கள் படக் குழு முதன் முறையாக "வீச்சருவா வீசி வந்தோம்..' எனத் தொடங்கும் பாடலின் விடியோவை வெளியிடுகிறோம். இந்தப் பாடலை நேதாஜி சுபாஷ் சந்திரபோûஸப் போற்றும் வகையில் உருவாக்கி இருக்கின்றன. இதுவரை சுதந்திரப் போராட்ட தியாகிகளையும், தலைவர்களையும் போற்றி ஏராளமான பாடல்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால் நேதாஜி சுபாஷ் சந்திர போஸைப் போற்றும் வகையில் தமிழில் பாடல்கள் வெளியானதில்லை.  அதை உருவாக்கியிருக்கிறோம் என்பதில் பெருமை என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.