ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

ஹீரோவான இயக்குநர்

ஜெயம் ரவி, யோகி பாபு, காஜல் அகர்வால் ஆகியோரது நடிப்பில் வெளிவந்த படம் "கோமாளி'. கரோனா கால முடக்கத்துக்குப்பின் வெளியான இப்படம், பெரும் அளவில் வெற்றிப் பெற்றது.

News image
Updated On :6 நவம்பர் 2022, 11:34 am

ஜெயம் ரவி, யோகி பாபு, காஜல் அகர்வால் ஆகியோரது நடிப்பில் வெளிவந்த படம் "கோமாளி'. கரோனா கால முடக்கத்துக்குப்பின் வெளியான இப்படம், பெரும் அளவில் வெற்றிப் பெற்றது. இந்தப் படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன், தற்போது கதாநாயகனாக நடிக்கிறார். "லவ் டுடே' என்ற பெயரில் படத்தை இயக்கி அதில் கதாநாயகனாகவும் நடிக்கிறார். இதில் அவருடன் இவானா, சத்யராஜ், ராதிகா, யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 

முதல் படம் ஹிட் கொடுத்த நிலையில், அடுத்த படத்தில் ஹீரோவாக நடிப்பது குறித்து பிரதீப் ரங்கநாதன் பேசும் போது.... ""முதல் படமான "கோமாளி'யில் நான் நடித்திருக்க வேண்டும். அப்போது நான் சினிமாவுக்கே புதுமுகம் என்பதால் தயாரிப்பாளர்கள் கிடைத்திருக்க மாட்டார்கள். அதனால் ஒரு பெரிய ஹீரோவை வைத்து படம் இயக்கி வெற்றிப் பெற வேண்டும் என்ற முனைப்பில் இருந்தேன். அதில் வெற்றியும் கிடைத்தது.  

இப்போது நடிக்கும் விருப்பத்தை நிறைவேற்றியுள்ளேன். இந்தக் கதையை நான் நடிப்பதற்காகவே எழுதினேன். 6 வருடங்களுக்கு முன்பே இதை குறும்படமாக எடுத்தேன். அதிலும் நானே நடித்தேன். ஒரு காதல் ஜோடி தங்களது செல்போனை ஒரு காலகட்டத்துக்குப் பின்னர் மாற்றி கொண்டால் என்ன நடக்கும் என்பதை காமெடியாக சொல்லுவதே கதை.  இனி இயக்கம், நடிப்பு என என் பயணம் இருக்கும். பிற இயக்குநர்கள் அழைத்தால் அதிலும் நடிப்பேன்'' என்றார் பிரதீப்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.