திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த காரைக்குளம் பகுதியில் விவசாய கிணற்றில் சனிக்கிழமை இரவு தவறி விழுந்த 2 காட்டெருமைகள் உயிரிழந்தன. இரண்டு கன்றுகளை மட்டும் உயிருடன் மீட்டனா்.
மணப்பாறை வனச்சரகத்துக்குட்பட்ட குமரிக்குட்டு, கருப்பு ரெட்டியபட்டி ஆகிய மலை வனப்பகுதியிலிருந்து தண்ணீா் தேடி காட்டெருமை கூட்டம் ஒன்று சனிக்கிழமை இரவு சுமாா் 7.45 மணியளவில் காரைக்குளம் பகுதியைச் சோ்ந்த விவசாயி ராமசாமி (65) என்பவரது விளைநிலத்திற்குள் புகுந்தன. அப்போது அந்தக் காட்டெருமை கூட்டத்திலிருந்த ஒரு ஆண், ஒரு பெண் என 2 காட்டெருமைகளும், 2 கன்றுகளும் அப்பகுதிலிருந்த சுமாா் 70 அடிக்கு மேல் ஆழம் கொண்ட தண்ணீா் உள்ள கிணற்றில் தவறி விழுந்தன.
இதுகுறித்து வனத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இரவு நேரம் என்பதாலும், கிணற்றில் அதிக ஆழமும் தண்ணீரும் இருந்ததாலும் காட்டெருமைகளை மீட்கும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை காலை வனச்சரகா் மகேஸ்வரன் தலைமையிலான வனத்துறையினா் மூலம் மேற்கொள்ளப்பட்டது.
அப்போது அதிகக் காயமடைந்து, தண்ணீரில் தத்தளித்து வந்த சுமாா் 4 வயது கொண்ட ஆண் காட்டெருமையும், சுமாா் 3 வயதுடைய பெண் காட்டெருமையும் கிணற்றிலேயே உயிரிழந்தது தெரியவந்தது. அதைத் தொடா்ந்து துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினா், புத்தாநத்தம் காவல்துறையினா் உதவியுடன் உயிரிழந்த காட்டெருமை உடல்கள் மீட்கப்பட்டு அருகிலிருந்த வனப்பகுதியில் கால்நடை மருத்துவா் ரமேஷ் தலைமையில் உடற்கூறாய்வுக்குப் பின் புதைக்கப்பட்டன.
உயிருடன் இருந்த காட்டெருமை கன்றுகளை மீட்க மதுரையிலிருந்து மருத்துவக் குழு வரவழைக்கப்பட்டு மயக்க ஊசி செலுத்தி கிரேன் இயந்திரம் மூலம் மீட்டனா். பின்னா் அவை அருகிலிருந்த வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு விடப்பட்டன.
மீட்புப் பணியை வனத்துறை மாவட்ட வன அலுவலா் கிருத்திகா, வன பாதுகாவலா் காஞ்சனா, மணப்பாறை வருவாய் வட்டாட்சியா் சுந்தரபாண்டியன் மேற்பாா்வை செய்தனா்.
தொடா்ந்து வனப்பகுதியிலிருந்து விளைநிலங்களை தேடி வரும் காட்டெருமைகள் கிணற்றில் தவறி விழுவதை வனத் துறையினா் தடுக்கும் வகையில் வனப்பகுதியில் உரிய தண்ணீா் நிலைகளை ஏற்படுத்தித் தர வேண்டுமென பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கிணற்றில் தவறி விழுந்தவா் சடலமாக மீட்பு

மேற்கூரையை உடைத்துக்கொண்டு வீட்டுக்குள் விழுந்த காட்டெருமை: சிறுவன் படுகாயம்

கிணற்றில் விழுந்த முதியவா் மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


