ரஜினி, குஷ்பூ, சுஹாசினி உள்ளிட்ட திரை பிரபலங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக இருந்தவர் சாய்பாபு. இவர் தற்போது ஸ்ரீ சங்கர நாராயணா சாமுண்டீஸ்வரி மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்து வரும் படம் 'மாயத்திரை'.
எழில், பாலா ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சம்பத்குமார் இந்தப் படத்தை எழுதி இயக்கியுள்ளார்.
அசோக்குமார், சாந்தினி தமிழரசன், ஷீலா ராஜ்குமார், காதல் சுகுமார், காதல் சரவணன், பாவா லட்சுமணன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இயக்குநர் பேசும்போது.... ""23 வருடங்களுக்கு முன்பு நாகர்கோவில் பகுதியில் இருந்த ஒரு திரையரங்கில் தீ விபத்து ஏற்பட்டு 23 பேர் பலி என்ற செய்தியைத் தழுவி இந்தத் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் இந்தப்படம் வழக்கமான ஹாரர் படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இதுவரை வந்த ஹாரர் படங்களில் பேய் பழிவாங்கும். இந்தப் படத்தில் பேய் பழிவாங்காது.. மன்னிப்பு என்பது மனித குலத்திற்கு மட்டும் சொந்தமானது அல்ல.. ஒரு பேயிடம் அது இருக்கிறதென சொல்லியிருக்கிறேன்.
ஒன்றல்ல, இரண்டல்ல 26 பேய்கள் இந்தப்படத்தில் இருக்கின்றன. சினிமாவில் இதுவரை திரைத்துறை சம்பந்தமான கதாபாத்திரங்கள் பல இடம் பெற்றிருந்தாலும் சவுண்ட் இன்ஜினியர் கதாபாத்திரம் இப்போதுதான் முதன்முறையாக இடம் பெற்றுள்ளது. புளியங்குடி அருகே இருந்த ஒரு திரையரங்கை வடிவமைத்து படப்பிடிப்பு நடத்தினோம்.
திருநெல்வேலி, தென்காசி, புளியங்குடி மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளன. வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி இந்தப் படம் திரையரங்க வெளியீடாக வெளியாகவுள்ளது'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆண்டிமடம் அருகே சுமை ஆட்டோ தீப்பிடித்து விபத்து ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்

உணவகத்தில் அராஜகம்: சிறுவன் உள்ளிட்ட இருவா் கைது

காரைக்கால் அருகே மீனவா் தற்கொலை

மாடியிலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


