தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

இளம் வயது தோழன்!

டாட்டா  வர்த்தக சாம்ராஜ்யத்தின்  முடி சூடிய மன்னனாக  இருக்கும் ரத்தன் டாட்டா.  சென்ற டிசம்பர் 28-இல்  தனது 84 ஆவது  பிறந்த நாளைக் கொண்டாட   நட்சத்திர ஹோட்டலிலோ,

News image
Updated On :5 பிப்ரவரி 2022, 11:46 am

டாட்டா வர்த்தக சாம்ராஜ்யத்தின் முடி சூடிய மன்னனாக இருக்கும் ரத்தன் டாட்டா. சென்ற டிசம்பர் 28-இல் தனது 84 ஆவது பிறந்த நாளைக் கொண்டாட நட்சத்திர ஹோட்டலிலோ, தனது வீட்டிலோ பிரம்மாண்ட விழாவை ஏற்பாடு செய்யவில்லை. ஐம்பது பேர்களைக் கூட அழைக்கவில்லை கேக் கூட ஆர்டர் செய்யவில்லை. தனது வீட்டில் தனது தோழன் ஷாந்தனு நாயுடுவுடன் ஒரு கப் கேக் வாங்கி தனது பிறந்தநாளைக் கொண்டாடியிருக்கிறார்.

பல ஆயிரம் கோடி புரளும் வர்த்தக சாம்ராஜ்ஜியத்தின் ராஜாவான ரத்தன் டாட்டா தனது பிறந்தநாளை மிகவும் எளிமையாகக் கொண்டாடியிருப்பதால் ரத்தன் டாட்டாவைப் ஊடகங்கள் கொண்டாடுகின்றன.

ரத்தன் டாட்டாவின் நண்பரான ஷாந்தனு நாயுடுவுக்கு 28 வயதுதான் ஆகிறது. டாட்டா நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ஷாந்தனு, வாகனங்களில் அடிபட்டு இறக்கும் நாய்களைக் காக்க இரவில் ஒளிரும் பட்டைகளை கழுத்தில் சமூக அலுவலர்களுடன் சேர்ந்து அணிவிக்கத் தொடங்கினார். ஊடகங்கள் ஷாந்தனுவை பாராட்ட அதுரத்தன் டாட்டா கவனத்திற்கு வந்தது. ஷாந்தனுவை அழைத்துப் பாராட்டினார். விரைவில் ஷாந்தனு ரத்தன் டாட்டாவின் நெருங்கிய நண்பரானார்.

மேற்படிப்பிற்காக ஷாந்தனு அமெரிக்க சென்று படித்து பட்டம் பெற்ற நாளில் ரத்தன் டாட்டாவும் விழாவில் கலந்து கொண்டார். தனியாக வாழும், முதியோரின் பேச்சுத் துணைக்காகவும், கவனித்துக் கொள்ளவும் இளைய தலைமுறையினர் கொண்ட குழுவையும் ஷாந்தனு நடத்தி வருகிறார். ஷாந்தனு அமெரிக்காவிலிருந்து மும்பை திரும்பியதும், டாட்டா தனது உதவியாளராகச் சேர்த்துக் கொண்டார். ரத்தன் டாட்டாவின் தோள் மேல் கை போட்டு பேசும் அளவுக்கு ரத்தன் ஷாந்தனு நட்பு இறுகிப் போயுள்ளது.

ரத்தன் டாட்டாவின் சுய சரிதை தயாராகிறது. சுயசரிதையை வெளியிட 2 கோடி ரூபாய் தர பிரபல புத்தக நிறுவனமான "ஹார்ப்பர் கோலின்ஸ்' முன்வந்துள்ளது. ரத்தன் டாட்டா குறித்து இதுவரை வெளிவராத தகவல்கள், ரகசியங்களாக டாட்டாவால் வைக்கப்பட்ட தகவல்களையும் ரத்தன்சுய சரிதை மூலம் பகிர்கிறார். டாட்டா சுயசரிதையை ரத்தன் சொல்ல, மத்திய அரசில் முன்னாள் உயர் அதிகாரியாகப் பணி புரிந்த தாமஸ் மாத்யு எழுதுகிறார். சுய சரிதை இந்த ஆண்டு நவம்பரில் வெளியாகும் ..!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.