விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
வேற்று கிரகங்களில் மக்கள் வாழ்கின்றனரா என்பதை அறிய "நாசா' மையம் ஆய்வு மேற்கொண்டுள்ளது. கெப்லர் விண்வெளி தொலைநோக்கி மூலம் சூரிய மண்டலத்திற்கு வெளியே வாழக்கூடிய உயிரினங்கள் குறித்து அது ஆய்வு நடத்தி வருகிறது. இதுவரை வேற்றுகிரகவாசிகள் பூமியை ஏன் தொடர்பு கொள்ளவில்லை என்பதை தற்போது விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதற்கு மனித இனம் இன்னும் முன்னேறாமல் இருப்பதே காரணமாம். அதாவது, இந்த பிரபஞ்சத்தில் பூமியில் உள்ள மனித இனம் மிக இளமையானதாக இருக்கிறதாம். ஒரு நாகரிகத்தின் தொடக்கம் குறைந்த பட்சம் 10 லட்சம் ஆண்டுகளாக இருக்க வேண்டும். அதாவது நாம் இன்னமும் ஒப்பிட்டளவில் சிம்பன்சிகளை போலவே தெரியலாம் என ஆய்வாளர்கள் கருதிகின்றனர்.

2016-ஆம் ஆண்டுக்கான உலகளவில் அதிக வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை கவர்ந்திழுக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தாண்டு ஐரோப்பிய நாடான ஸ்பெயின் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த பிரான்ஸ் இந்தாண்டு 2-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்தியா இந்த பட்டியலில் 40-ஆவது இடத்தில் உள்ளது.
நவீன செயலி

குழந்தைகள் வீட்டில் தூங்குவதை விட, கார் பயணங்களில் இயல்பாகவே உறங்கிவிடும். இந்த வழக்கத்தை வைத்து குழந்தைகளுக்கென நவீன படுக்கை ஒன்றை கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு உருவாக்கியுள்ளது. வீட்டில் எந்தவித தொந்தரவுமின்றி குழந்தைகள் உறங்க இது உதவுகிறது. மேக்ஸ் மோட்டார் ட்ரீம்ஸ் க்ரிப் என்ற பெயரில் அந்நிறுவனம் தயாரித்துள்ள குழந்தைகளுக்கான இந்தத் தொட்டிலில் பல தொழில்நுட்பங்களும் இடம்பெற்றுள்ளன. தெருவிளக்குகள் போன்ற உணர்வை ஏற்படுத்தும் எல்.இ.டி விளக்குகள் இந்த நவீனத் தொட்டிலில் உள்ளன. குழந்தை எது போன்ற பயணத்தில் உறக்கத்தை எட்டும் என்பதை பெற்றோர்கள் அறிந்துகொள்ளும் வகையில் செயலி ஒன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வித்தியாசமான அழைப்பிதழ்

மக்களிடமும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக திருமண அழைப்பிதழை ஏ.டி.எம் கார்டு வடிவில் தற்போது அச்சடிக்கின்றனர். இந்த ஏ.டி.எம் கார்டு வடிவிலான திருமண அழைப்பிதழ்கள் எளிய வகையில் அனைவரும் புரிந்து கொள்ளும் விதத்தில் மணமக்களின் பெயர்கள், கல்யாண தேதி, இடம் ஆகிய விவரங்கள் மட்டும் இடம்பெற்றுள்ளது.
புதிய சாதனம்

இங்கிலாந்தில் விஞ்ஞானி கேவ் தலிவால் தலைமையிலான குழு உடலை ஊடுருவிப் பார்த்து நோயின் தன்மையை சொல்லும் புதிய காமிராவை கண்டுபிடித்துள்ளது. "உடல் உள்ளுறுப்புகளின் தன்மை குறித்து ஆராய எண்டோஸ்கோப் போன்ற சாதனங்களை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், எண்டோஸ்கோப்பை உடலுக்குள் செலுத்திய பிறகு, அதன் இருப்பிடத்தை துல்லியமாக அறிந்து சரியான இடத்துக்கு நகர்த்த எக்ஸ்ரேவைத்தான் நாட வேண்டியுள்ளது. ஆனால், இந்த காமிரா, எண்டோஸ்கோப் இருப்பிடத்தை சரியாக காட்டி விடும். அதற்கான நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சிலிக்கான் சிப், காமிராவில் பொருத்தப்பட்டுள்ளது. எனவே, இனி எக்ஸ்ரே மற்றும் ஸ்கேனுக்கு அவசியம் இல்லை.
வித்தியாசமானவங்கி

முழுக்க முழுக்க ஆடு வளர்ப்பதற்காகவே வங்கி ஒன்று செயல்படுகிறது. எங்கே..? தமிழ்நாட்டில் அல்ல; மஹாராஷ்டிராவில்தான் அந்த ஆடு வங்கி செயல்படுகிறது.
இந்த வங்கியில் ஆடு வளர்க்க ஆட்டைக் கடன் தருவார்கள். கடனைத் திரும்பிச் செலுத்த பணம் தர வேண்டியதில்லை. பதிலாக கடன் வாங்கியது ஒரு ஆடு என்றால், நான்கு ஆடுகளை நாற்பது மாதங்களுக்குள் ஒப்படைத்தால் போதும்!
இந்த ஆடு வங்கி மாநில அல்லது மத்திய அரசு நடத்தும் வங்கி அல்ல. தனியார் நடத்தும் வங்கி. விவசாயியான நரேஷ் தேஷ்முக் மகாராஷ்டிராவின் அகோலா மாவட்டத்தில் கார்கேடா கிராமத்தில் இந்த வங்கியை நடத்தி வருகிறார்.
விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்க, பாரம்பரிய விவசாயத்துடன் ஒருங்கிணைந்த விவசாயத்தின் கிளையாக ஆடு வளர்ப்பினை ஊக்குவிக்கவே நரேஷ் இந்த ஆடு வங்கியை 2018-ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறார்.
""ஆடு வளர்ப்பு நல்ல லாபம் தரும் தொழில் என்று அனுபவ பூர்வமாகத் தெரிந்து கொண்டேன். அதனால் ஆடுகளுக்கான பிரத்யேக வங்கியை எனது சேமிப்பான ஐம்பது லட்சம் முதலீட்டில் 340 ஆடுகளுடன் வங்கியைத் தொடங்கினேன்.
அந்த 340 ஆடுகளும் ஆடு வளர்ப்பாளர்களின் பொறுப்பில் இருந்தன. அவற்றிலிருந்து ஆடுகளை விநியோகம் செய்து வருகிறோம்'' என்கிறார் நரேஷ். தேஷ்முக்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க முதற்கட்ட தேர்தலில் 91.78% வாக்குப்பதிவு!

தமிழகத்தில் 84.69% வாக்குப்பதிவு! ஆண்களைவிட பெண்களே அதிகம்!

மே.வங்கத்தில் வாக்குப்பதிவு நாளில் பிரதமர் மோடி சாலை வலம்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


