பாசு சாட்டர்ஜி
1960 -ஆம் ஆண்டு முதல் 1986 வரை ஏராளமான ஹிட் படங்களை கொடுத்தவர். நடுத்தர குடும்பத்திற்கே உரிய காதல் நகைச்சுவை கிளைமாக்ஸ் இவர் படங்களில் நிச்சயம் இருக்கும்.


1960 -ஆம் ஆண்டு முதல் 1986 வரை ஏராளமான ஹிட் படங்களை கொடுத்தவர். நடுத்தர குடும்பத்திற்கே உரிய காதல் நகைச்சுவை கிளைமாக்ஸ் இவர் படங்களில் நிச்சயம் இருக்கும். அமோல் பலேகர் இவர் இயக்கத்தில் பல வெற்றிப் படங்களை தந்துள்ளார். அத்துடன் கிட்டத்தட்ட 29 படங்களை இயக்கியுள்ளதால் மிதுன்சக்கரவர்த்தி, வினோத் மேக்ரா, ஜிதேந்திரா, தேவ் ஆனந்த், ராஜேஷ்கன்னா, தர்மேந்திரா, அமிதாப் பச்சன் என அனைவரும் இவர் படத்தில் நடித்துள்ளனர்.
டி.வி தொடர்கள் பலவற்றை இயக்கியுள்ளார். நான்கு படங்களை தயாரித்துள்ளார். சில படங்களுக்கு திரைக்கதையும் மேலும் சிலவற்றிற்கு கதை வசனமும் எழுதியுள்ளார். 2007-இல் வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற்ற இவர் பற்றி ஒரு ருசிகர தகவல். 18 ஆண்டுகள் மும்பையில் ஆசிரியர் கரஞ்சியாவின் "பிளிட்ஸ்' இதழில் கார்டூனிஸ்டாக பணிபுரிந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...