நம்பிக்கை வந்திருக்கிறது
தீராத காதலாகவும், கருணையாகவும் சினிமா என்னை துரத்திக் கொண்டே இருக்கிறது. சுயநலமாக செயல்படாமல் போனது கூட என் வளர்ச்சிக்கு தடையாக இருந்திருக்கலாம்.


தீராத காதலாகவும், கருணையாகவும் சினிமா என்னை துரத்திக் கொண்டே இருக்கிறது. சுயநலமாக செயல்படாமல் போனது கூட என் வளர்ச்சிக்கு தடையாக இருந்திருக்கலாம். என்னை ஒரு வட்டத்துக்குள்ளேயே வைத்து லாபம் தேட நினைத்தவர்கள் நிறைய பேர் இருந்தார்கள். எனக்குப் பிரியமான ஒரு கனவை நானே கண்டுபிடிக்கத் தவறி நின்ற தருணங்கள் நிறையவே இருக்கின்றன. அண்மை காலமாக சினிமா விழாக்களுக்கு போவதைக் கூட தவிர்த்து விட்டேன். அப்படியே போனாலும் டைரக்டர் வாசு சாரின் மகன் என்கிற அடையாளம்தான் கூடவே வருகிறது. இதை தாண்டிய அடையாளம், ஒரு வெற்றி இதுவெல்லாம் கூட இருந்தால் அதன் மதிப்பு எப்படியிருக்கும் என்கிற ஆசை இப்போது துளிர்க்கிறது. அதற்காகத்தான் படத்துக்கே "படம் பேசும்' என்று தலைப்பு.'' சக்தி பேசுகிற ஒவ்வொரு வார்த்தையிலும், கடந்து வந்த பயணங்களின்
அர்த்தம் புரிகிறது.
""இந்த சினிமாவில் போதும்... போதும்... என்கிற அளவுக்கு பாடம் படித்து விட்டேன். ஒரு நாள் அத்தனை பரவசங்களுடன் இந்த சினிமாவுக்குள் இறங்கி வந்து விட்டேன். என்னை தவறான பாதைக்கு அழைத்து போய்விட்டார்கள். அங்கேயிருந்து மீண்டு வருவதற்கான ஒரு பாதையை இந்த "படம் பேசும்' படம் தொடங்கி வைத்திருக்கிறது. "பை 2' படத்தின் மூலம் பரிச்சயமான ராகவாதான் இயக்குநர். பெரிய நம்பிக்கை வைத்து கதை சொன்னார். ""நம்பி கொடுங்க பாஸ்....''ன்னு கேட்டேன். ""நிச்சயம் ஜெயிக்கலாம்....'' என்று மைலேஜ் தந்தார். படம் எடுத்த வரைக்கும் பார்த்து அசந்து விட்டேன். என் மீது எனக்கே நம்பிக்கை வந்திருக்கிறது.
நம்பிக்கை வார்த்தைகள் நல்ல விஷயம்தான்... ஆனால் பிரகாசமான ஓப்பனிங்கிற்கு இத்தனை நாள் காத்திருக்க வேண்டுமா...?
என்னென்ன தவறுகள் என்று இப்போது பேச முடியாது. ஒவ்வொரு படத்துக்கும் என் பெஸ்ட் உழைப்பைத்தான் தந்திருக்கிறேன். எனக்கு பின்னாடி வந்தவர்கள் எல்லாம் ஆளுக்கொரு பக்கம் ரெக்கார்ட் பிரேக் செய்து நிற்கிறார்கள். சில படங்களைப் பார்க்கும் போதெல்லாம், இது மாதிரி நமக்கும் ஒரு படம் அமைந்தால் நன்றாக இருக்கும் என தோன்றும். ஆனால் அதற்காக காத்திருக்க மட்டுமே செய்யலாம்... வேறு என்ன செய்வது..? என்னை நானே வடிவமைக்க ஆசைப்பட்டேன். ஒவ்வொரு படத்தின் போதும் நம்ம ரூட் எதுவென சரியாக கண்டுபிடிக்க முடியவில்லை. "நினைத்தாலே இனிக்கும்' நல்ல வெளிச்சம் கொடுத்தது. இருந்தாலும், அடுத்தடுத்து சறுக்கல். கேட்கும் போது, நன்றாக இருக்கிற கதை, படமாக வந்து பார்க்கும் போது முகம் சுளிக்க வைக்கும். இது ஒரு முறை இல்லை. அடுத்தடுத்தும் இந்த நிலை தொடர்ந்ததால், நானே அமைதியாகி
விட்டேன்.
இவ்வளவு பக்குவம் நிச்சயம் வெற்றிப் பாதைக்கு கொண்டு போகும்... ஆனால் சினிமா ஆள்கள் நிறைய பேர் உங்கள் பக்கம் இருந்திருப்பார்களே... அவர்கள் யாருமே துணைக்கு வரவில்லையா...?
வாசு சாரின் மகன் என்கிற விஷயம் சரியா? தவறா? என்று எனக்கு தெரியவில்லை. அமைதியாக அமர்ந்து யோசித்து பார்த்தால், ப்ளஸ் - மைனஸ் இரண்டுமே அங்கேதான் இருந்திருக்கிறது. நிறைய பேர் என்னை வாசு சாரின் பையனாகத்தான் பார்த்தார்கள். அதனால் அவர்களிடம் போய் எதையும் கேட்க முடியாது. என்னைச் சுற்றி இருந்த தனிமைதான் நிறைய கற்றுக் கொடுத்தது.
இவ்வளவு ஃபீல் இருந்திருக்கு... பல மாஸ் நடிகர்களை உருவாக்கிய உங்கள் அப்பாவிடமே போய், ""எனக்கு ஒரு படம் பண்ணுங்க...''ன்னு சில அன்பு வார்த்தைகள் பேசியிருக்கலாமே...?
புரொஃபஷன் வேறு. ரிலேஷன்ஷிப் வேறு. ரிலேஷன்ஷிப்தான் எனக்கு முக்கியம். ஆனால் எங்க அப்பா தன்னை நிரூபித்துதான் இந்த இடத்துக்கு வந்திருக்கிறார். அது போல நானும் என்னை நிரூபிப்பேன். இந்த கேரக்டருக்கு சக்தி பொருத்தமாக இருப்பான் என்று அவருக்கு தோன்றினால், அந்த இடத்தில் நான் இருப்பேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...