2.5 கிலோ முதல் 120 கிலோ வரை
* நாய்களுக்கு வியர்வை சுரப்பிகள் இல்லை. அது தன் உடல் வெப்பத்தை வெளியேற்ற நாக்கை முழுவதுமாக வெளியே தொங்கிவிட்டு வேகமாய்ச் சுவாசிக்கும். * நாயின் மூக்கை வைத்து அதன் உடல்நிலையைக் கண்டுபிடித்துவிடலாம்.


* நாய்களுக்கு வியர்வை சுரப்பிகள் இல்லை. அது தன் உடல் வெப்பத்தை வெளியேற்ற நாக்கை முழுவதுமாக வெளியே தொங்கிவிட்டு வேகமாய்ச் சுவாசிக்கும்.
* நாயின் மூக்கை வைத்து அதன் உடல்நிலையைக் கண்டுபிடித்துவிடலாம். அதில் ஈரத்தன்மை எப்போதும் இருந்துகொண்டேயிருந்தால் நல்ல உடல்நலத்தோடு இருக்கிறது என்று அர்த்தம். நாயின் மூக்கு உலர்ந்திருந்தால் ஏதோ உடல்நலக் கோளாறு என்று பொருள்.
* நாய் தன் நாக்கைக் கொண்டே தன்னை சுத்தம் செய்து கொள்கிறது.
* மனிதர்களுக்கு 32 பற்கள் என்றால் நாய்களுக்கு 42 பற்கள் இருக்கும்.
* மனிதனைவிட வாசனை உணர்ச்சி சம்பந்தமான செல்கள் நாயிடமே அதிகமாக உள்ளன.
* நியூசிலாந்தில் நாய்களை வளர்ப்போர் அவற்றை 24 மணிநேரத்திற்கு ஒரு முறையாவது வெளியே காலாற அழைத்துச் செல்ல வேண்டும் என்று சட்டமே இருக்கிறது.
* ஒரு நாயை 5 நாள்களுக்கு தூங்க விடாமல் தடுத்துக்கொண்டே இருந்தால் அது இறந்துவிடும். அதை 5 நாள்கள் பட்டினி போட்டால் கூட சாகாது. உணவைவிட தூக்கமே நாய்க்கு அதிக முக்கியம்.
* சுவிஸ், ஸ்காட்லாந்து போன்ற நாடுகளில் நாய் ஓட்டப்பந்தயம் நடைபெறுவது வழக்கம்.
* ஐரோப்பியர்கள் நாய்களை அழைத்துச் செல்ல தனி கார்கள் வைத்திருக்கிறார்கள்.
* ஸ்காட்லாந்தில் ஆண்டுதோறும் நாய் ஓட்டப்பந்தயம் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் நாய்க்கு கிரேஹாண்ட் டெர்பி எனும் பட்டம் அளித்து கெüரவிக்கப்படுகிறது. அதன் உரிமையாளருக்கு 3500 பவுண்டுகள் வெகுமதியும் அளிக்கப்படுகிறது.
* டிங்கோ எனும் ஆஸ்திரேலிய வகை நாய்தான் மிகவும் மெலிதாகவும், குறைவாகவும் குறைக்கும்.
* காற்றின் எதிர்த்திசை நோக்கியே நாய் எப்போதும் தலை வைத்துத் தூங்கும். அதனால்தான் எதிரியின் நடமாட்டத்தைப் புரிந்து கொள்ளவும் எதிரியிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும் நாயால் முடியும்.
* ஒரே சமயத்தில் நம் இரு கண்களாலும் ஒரு பொருளைத்தான் பார்க்க முடியும். ஆனால் நாய்களால் ஒரே சமயத்தில் இரண்டு கண்களால் வெவ்வேறான பொருள்களைப் பார்க்க முடியும்.
* உலகம் முழுவதும் எல்லா காலநிலைகளிலும் வாழும் ஒரே விலங்கு நாய்தான்.
* செயின்ட் பெர்னார்ட் என்ற வகை நாய்கள் தான் உருவத்தில் பெரியவை. அவை பொதுவாக 120 கிலோ எடை வரை இருக்கும்.
* உருவத்தில் சிறிய நாயினம் சிஹுவாஹுவா என்பதுதான். நன்றாக வளர்ந்த இந்த நாயின் நீளம் 12 முதல் 15 இஞ்ச், எடை 2.5 கிலோ தான் இருக்கும்.
* குட்டைக் குட்டையாகப் பஞ்சு பந்து போலக் காட்சியளிக்கும் பெகிங்கிஸ் நாய் இனம் பார்வையற்றவர்களை வழி காட்டி நடத்திச் செல்வதில் சிறந்தவை.
* ராக்கெட்டில் பயணம் செய்து விண்வெளிக்குச் சென்ற முதல் நாயின் பெயர் லைக்கா.
* டாபர்மேன், பின்ஷன், பொமரேனியன், லாசாஆப்சோ, ரிட்ரீவர், ஸ்பானியல், ஜெர்மன் ஷெப்பர்ட் போன்றவை எல்லாம் மேல்நாட்டு நாய் ரகங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...