சமையல்
மும்பை போண்டா தேவையானவை: உருளைக்கிழங்கு- 150 கிராம் அரிசிமாவு, கடலைமாவு - 50 கிராம் வெங்காயம்-3; பச்சை மிளகாய்-2 கடுகு, உப்பு, எண்ணெய்- தேவையான அளவு செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி, சி


மும்பை போண்டா
தேவையானவை:
உருளைக்கிழங்கு- 150 கிராம்
அரிசிமாவு, கடலைமாவு - 50 கிராம்
வெங்காயம்-3; பச்சை மிளகாய்-2
கடுகு, உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி, சின்னதாக அரிந்து கொள்ள வேண்டும். எண்ணெயில் சிறிது கடுகு போட்டு தாளித்து உருளைக்கிழங்கில் போட்டு, அதனை உருண்டைகளாக உருட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். அரிசி மாவு, கடலை மாவு ஆகியவற்றில் நீர் விட்டுக் கரைத்துக் கொள்ள வேண்டும். அதில் உருளைக் கிழங்கை முக்கி எடுத்து, வாணலியில் எண்ணெய்விட்டு போட்டு எடுத்தால் மும்பை போண்டா தயார்.
வெஜிடபிள் பக்கோடா
தேவையானவை:
கடலைமாவு- 200 கிராம்; அரிசிமாவு- 50 கிராம்
மைதாமாவு-50 கிராம்
மஞ்சள்பொடி, பெருங்காயத்தூள்- 1 சிட்டிகை
கேரட், பீன்ஸ்- 50 கிராம்
மிளகாய்ப்பொடி- 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை, கொத்தமல்லி- சிறிதளவு
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை: மாவுகளை மிளகாய்ப்பொடி, மஞ்சள்பொடி, பெருங்காயப்பொடி ஆகியவற்றைப் போட்டு பிசைந்து கொள்ள வேண்டும். காய்கறிகளை நீளமாக நறுக்கிப் போட வேண்டும். சிறிது கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு, தண்ணீர்விட்டு பிசைய வேண்டும். வாணலியில் எண்ணெயை ஊற்றி அடுப்பில் வைத்துக் காய்ந்ததும் பக்கோடா போடுவதுபோல போட்டுப் பொரித்து எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...