ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

அஞ்சு புள்ளி இறால்

இறால் மீனிலிருந்து ஊறுகாய், வடை, கட்லெட், ஆம்லெட், பக்கோடா போன்ற சுவைக்கூட்டப்பட்ட மீன் உணவுப் பொருட்கள் தயாரித்து இப்போது பலரும் விற்பனை செய்கிறார்கள். ஏனெனில் இறால் மீன் உணவு மற்ற மீன் வகைகளை விட அத

News image
Updated On :28 டிசம்பர் 2023, 4:39 pm

சி.வ.சு. ஜெகஜோதி

இறால் மீனிலிருந்து ஊறுகாய், வடை, கட்லெட், ஆம்லெட், பக்கோடா போன்ற சுவைக்கூட்டப்பட்ட மீன் உணவுப் பொருட்கள் தயாரித்து இப்போது பலரும் விற்பனை செய்கிறார்கள். ஏனெனில் இறால் மீன் உணவு மற்ற மீன் வகைகளை விட அதிகம் ருசியானது.இறால் மீன் வகைகளில் பலரும் பார்த்திராத ஒருவகை தான் அஞ்சுபுள்ளி இறால் எனப்படுகிறது. இதன் சிறப்புகள் குறித்து ராமநாதபுரத்தை சேர்ந்த கடல் உயிரியலாளர் ர.செந்தில்குமார்..

""கடலுக்குள் இருக்கும் கடல் தாமரைகளில் அமர்ந்து வாழ்க்கை நடத்தும் இவ்வகை மீன் இனத்திற்குக் கிளீனர் இறால்கள் என்றும் பெயர். ஆங்கிலத்தில் ஹிப்போலைடிடே எனப்படும் இவ்வகை கிளீனர் இறால்களில் மட்டும் மொத்தம் 36 குடும்பங்கள் இருக்கின்றன. கடல் தாமரைகளின் இதழ்களின் மேற்புறத்தில் அழகாக அமர்ந்து கொண்டு நடனமாடும் அழகே அற்புதமானது. மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ஆழமற்ற பகுதிகளில் கூட இதன் அழகையும், அசைவையும் கண்கள் குளிரக் கண்டு ரசிக்க முடியும். இவை சாதாரண இறால்களைவிட சிறியதாக இருக்கும்.

சிறிய கால்கள், நகங்கள் மற்றும் பழுப்பு கலந்த மஞ்சள் நிறத்திலும் உடல் அமைந்திருக்கும். பெரிய அளவில் வெள்ளை நிறப் புள்ளிகளும் கவர்ச்சிகரமான வெள்ளைக் கண்களும் உடையவை. இம்மீனின் மேற்புறத்தில் கண்களைப் போன்று ஐந்து அழகிய பெரிய புள்ளிகள் இருப்பதால் இதனை அஞ்சுபுள்ளி இறால் என அழைக்கிறார்கள். இதிலிருக்கும் கண் போன்ற புள்ளிகள் கருப்பு நிறப் பின்னணியில் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். ஒரு கடல் தாமரையில் சில சமயங்களில் இரு இறால்கள்கூட அமர்ந்திருக்கும். பகல் நேரத்தில் கடல் தாமரைகளின் இதழ்களில் மறைந்தும் இரவு நேரங்களில் சுறுசுறுப்பாகவும் ஜாலியாகவும் நாட்டியமாடிக் கொண்டே இரைகளைப் பிடித்து உண்ணும் குணமுடையது. கடல் தாமரைகள் மீதம் வைக்கும் உணவுகளையும் இவை சாப்பிட்டுக் கொள்ளும்.

பெண் இனம் அளவில் பெரியதாகவும் பல வண்ணங்களிலும் அழகிய புள்ளிகள் உடையதாகவும் இருக்கும். ஆண் இனம் அளவில் சிறியது. இவ்விரண்டின் வளர்ச்சியும் பெரும்பாலும் 4 செ.மீ. மட்டும் வரை வளரும். தனது நீண்ட கால்களின் உதவியுடன் கடல் தாமரைகளின் இதழ்களைப் பிடித்துக் கொண்டே நீண்ட நேரம் தொங்கும். கடலில் ஆழமற்ற பகுதிகளில் வசிக்கும் இவ்வினத்தின் உடல் ஒரு கண்ணாடியைப் போன்று இருக்கும். இவை உணவருந்தும்போது அந்த உணவு வயிற்றுக்குள் எவ்வாறு பயணிக்கிறது என்பதை நாம் நமது வெறும் கண்களால் பார்க்க முடியும்''  என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.