தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

புள்ளிமான் குட்டியும் முள்ளம்பன்றியும்...!

அந்த வனத்தில் மரம், செடிகள் அடர்ந்திருந்தது. விலங்குகள் அதன் சரத்துகளில் போய்க் கொண்டிருந்தன. பறவைகளும் பாடி பறந்து கொண்டிருந்தன.  

News image
Updated On :12 பிப்ரவரி 2023, 12:30 am

அந்த வனத்தில் மரம், செடிகள் அடர்ந்திருந்தது. விலங்குகள் அதன் சரத்துகளில் போய்க் கொண்டிருந்தன. பறவைகளும் பாடி பறந்து கொண்டிருந்தன.  ஒரே சரத்தில் சிறு உருவம்  கருப்பாக வந்துகொண்டிருந்தது.  அது முள்ளம்பன்றி.  

அதன் உடலில் கருப்பு கூரிய முள்கள் ஆயிரக்கணக்கில் இருந்தன. இது உரோமம்தான் தடித்து முள்கள் போல் ஆகியிருந்தது. ஆனால் அது அப்பிராணி விலங்குதான். 

இதன் முள்கள் பிற விலங்குகள் மீது பட்டால், வலி உயிர்போகும் என்பதால், மற்றவை முள்ளம்பன்றியின் அருகே வராது.  இதுவே முள்ளம்பன்றிக்கு வேதனையாக இருந்தது.


ஒருநாள் அழகிய புள்ளிமான் வந்தது.  இதனிடம் முள்ளம்பன்றி, ""பார்த்தீங்களா? என்னைப் பார்த்து பலரும் அச்சப்படுகிறார்கள். யாரும் விளையாடவும் வர மறுக்கிறார்கள். நான் யாருக்கும் தொல்லை தர மாட்டேன்''  என்றது.

இதைகேட்ட மானின் மனம் இளகிவிட்டது.  ""முள்ளம்பன்றியே.. இனி நாம் நண்பர்கள்'' என்று.

அன்று முதல் இரண்டும் ஒன்றாகப் போய்வந்தன. மற்ற விலங்குகள் மான்குட்டியை எச்சரித்தன.   அதன் தாயும் எச்சரிக்கைவிட, ""நட்புக்காகதானே'' என்றே குட்டிமானும்  சொல்லியது. 

ஒரு நாள் புள்ளிமான் குட்டி ஒற்றைச் சரத்தில் வந்து கொண்டிருந்தது. எதிரே வந்த ஓநாய், மான் குட்டியின் மீது பாய்ந்தது.  அப்போது எங்கிருந்தோ வந்த முள்ளம்பன்றியின் உடல் ஓநாய் மீது பட்டது. சில முள்கள் ஓநாயின் உடம்பில் பதம் பார்த்தது.  வலி பொறுக்காமல் ஓநாய் அலறி ஓடியது. 

அப்போது அங்கு வந்த பிற விலங்குகள், ""நீங்கள் நல்ல நண்பர்களே!'' என்று பாராட்டின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.