தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

பகல் 1 வரை... 2021 தேர்தலைவிட 17% அதிக வாக்குப்பதிவு!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம் பற்றி...

News image

தமிழ்நாட்டில் வாக்குப் பதிவு விறுவிறு - PTI

Updated On :23 ஏப்ரல் 2026, 9:02 am

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2021-ஐ ஒப்பிடும் போது பகல் 1 மணி வரை 17 சதவிகிதம் அதிக வாக்குகள் பதிவாகியுள்ளது.

தமிழ்நாட்டில் 234 பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று(ஏப். 23) காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பகல் 1 மணி வரை 56.81 சதவிகித (3.25 கோடி) வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த 2021 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பகல் 1 மணிவரை 39.61 சதவிகித வாக்குகள் மட்டுமே பதிவாகின. கடந்த தேர்தலை ஒப்பிடும்போது இம்முறை 17.2 சதவிகிதம் கூடுதலாக வாக்குகள் பதிவாகியுள்ளது.

இதேபோல், கடந்தமுறை சென்னையில் மொத்த வாக்குப் பதிவே 59.06 சதவிகிதம் என்ற நிலையில், தற்போது பகல் 1 மணிக்கே 54.58 சதவிகிதம் பதிவாகியுள்ளது.

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டத்தில் 62.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் 76.6 சதவிகித வாக்குகள் பதிவான நிலையில், இந்த முறை அதிகளவிலான இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருவதால் மொத்த வாக்கு எண்ணிக்கையும் அதிகரிக்கும் எனத் தெரிகிறது.

முன்னதாக நடைபெற்ற புதுச்சேரி, கேரள சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் கடந்த முறையைவிட அதிக வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.

முந்தைய தேர்தல்களில் 1 மணி நிலவரம்

2016 சட்டப்பேரவைத் தேர்தல் - 42.10% - 2.45 கோடி வாக்குகள்

2019 மக்களவைத் தேர்தல் - 39.49% - 2.36 கோடி வாக்குகள்

2021 சட்டப்பேரவைத் தேர்தல் - 39.61% - 2.48 கோடி வாக்குகள்

2024 மக்களவைத் தேர்தல் - 39.51% - 2.46 கோடி வாக்குகள்

Summary

As of 1 PM... 17% higher voter turnout than the 2021 elections!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.