அங்கிள் ஆன்டெனா: விமானங்களின் ஜன்னல்களின் நான்கு மூலைகளும் ஏன் வட்ட வடிவமாக அமைக்கப்படுகிறது?
விமானங்களின் ஜன்னல்களின் நான்கு மூலைகளும் ஏன் வட்ட வடிவமாக அமைக்கப்படுகிறது?


விமானங்களின் ஜன்னல்களின் நான்கு மூலைகளும் ஏன் வட்ட வடிவமாக அமைக்கப்படுகிறது?
சதுர வடிவ ஜன்னல்களின் நான்கு முனைகளும் கூர்மையாக அமைந்து விடுகிறது. ஆனால், முனைகள் கூர்மையாக இல்லாமல் வட்டமாக அமைக்கும்போது அதைத் துடைப்பதற்குக்கூட எளிதாக அமைந்துவிடும்.
இதுதான் முதன்மையான காரணம். மேலும், பொதுவாக கூர்மையான முனைகள் அதிகப்படியான அழுத்தத்துக்கு உள்ளாகும்.
அதனால் அவை நாளடைவில் வலுவிழந்து விடக்கூடும்.
விமானம் பறந்து கொண்டிருக்கும்போதே ஜன்னல் உடையக் கூடிய அல்லது அவற்றில் விரிசல் விழக் கூடிய வாய்ப்புகள் அதிகம். ஏனெனில் விமானத்தைச் சுற்றி வெளிக்காற்றின் அழுத்தம் மிகமிக அதிகமாக இருக்கும்.
இதுபோன்ற வளைந்த அல்லது வட்ட வடிவ ஜன்னல்களில் காற்று மோதும்போது அது ஓரிடத்தில் குவிக்கப்படாமல் பல்வேறு இடங்களுக்கு அது கடத்தப்படும். அதனால்தான் விமான ஜன்னல்கள் வட்டவடிவில் அமைக்கப்படுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...