தூங்கும் விஷயத்தில் விலங்குகள் எப்படி? நம்மைப் போல குறட்டை விடும் விலங்குகள் உள்ளனவா?
தூங்குவதில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி. நாய், பூனை முதலிய வீட்டு விலங்குகள் உடலைக் கதகதப்பாக வைத்துக் கொள்வதற்காகத்தான் அடுப்பங்கரைப் பகுதியில் அடிக்கடி உலா வருகின்றன. நாம் படுக்கும் இடத்தின் அருகில் சாக்கு ஒன்றைப் போட்டுப் பாருங்கள். அதில் வந்து படுத்துக் கொள்ளும். நமது உடலிலிருந்து வரும் உஷ்ணத்தைக் கிரகித்துக் கொள்வதற்குத்தான் இப்படிச் செய்கின்றன.
குட்டிகள் ஹாயாகத் தூங்கும்போது அவற்றை அரவணைத்தபடி தாய்ப் பூனை அருகேயே படுத்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள். குட்டிகள் கவலையில்லாமல் தூங்கும். அலர்ட்டாக இருப்பவை தாய்ப் பூனைகளே. ஆடு, மாடுகள் நான்கு கால்களையும் மடித்து, அதன் மீது தலையைக் கவிழ்த்துக் கொண்டு படுக்கும். பாம்புகள் எல்லாம் ஸ்பிரிங் போல உடலைச் சுற்றிக்கொண்டு உறங்கும். ஐரோப்பாவில், சிலவகை கிளிகள், வவ்வால் போலத் தலைகீழாகத் தொங்கிக் கொண்டே தூங்குகின்றன.
வாத்து மற்றும் பல பறவைகள் நின்றபடியே தூங்கும். ஆஸ்திரேலிய போலார் கரடிகள் மரத்தைக் கட்டிப்பிடித்தபடி தூங்கும். எறும்புகள் பாதுகாப்பான இடத்தில் மணற்பரப்பை திண்டு போல ஆக்கிக்கொண்டு, அதில் தலையைப் பதித்தபடி தூங்கும். கீரி போல இருக்கும் ராக்கூன் என்ற விலங்கு தூங்கும்போது கர்புர் என்று பலமாகக் குறட்டை விட்டபடி தூங்குமாம். இப்படிப் பல வகைகளில் உறங்கும் விலங்குகளை ஆராய்ந்தவர்கள், அவற்றுக்குக் கனவுகள் வருவதற்குக்கூட சாத்தியங்கள் உள்ளன என்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை விரும்பும் மக்கள்: சந்திரபாபு நாயுடு

‘எக்ஸ்’ தளத்தில் ஆபாச உள்ளடக்கம்: எலான் மஸ்குக்கு பிரான்ஸ் அழைப்பாணை

அடுக்குமாடி குடியிருப்புகளில் பாமக வேட்பாளா் பாலு பிரசாரம்!

தெற்கு லெபனானில் சிலுவை அவமதிப்பு: இஸ்ரேல் வீரருக்கு வலுக்கும் கண்டனம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


