சந்தேரி கோட்டைகள், நினைவுச்சின்னங்களுக்கு மட்டுமல்ல; அழகிய வழவழப்பு சந்தேரி புடவைகளும் பிரபலம்.
சந்தேரி- பழைமை வாய்ந்த நகரம். குஜராத்தின் பழைமையான துறைமுகங்கள், மால்வா, மேவார், மத்திய இந்தியா, பகுதிகளுக்கு வியாபாரப் பாதை இந்த நகரம்.பேட்வா ஆற்றின் தென் மேற்கே அமைந்துள்ளது. மலைகளாலும், வனப் பகுதிகளாலும் சூழப்பட்ட பகுதி. மகாபாரதத்தில் சேதி நாட்டு மன்னன் சிசுபாலன் ஆண்ட பகுதி என கூறப்படுகிறது.
11-ஆம் நூற்றாண்டில் கீர்த்தி பால் என்ற மன்னர் இந்த நகரை உருவாக்கினார். இஸ்லாமியர்- ராஜபுத்திரர்- ஆங்கிலேயர் ஆட்சி- குவாலியர் மன்னர் என அடுத்தடுத்து ஆளுகையில் இருந்த இந்தப் பகுதி, சுதந்திரத்துக்குப் பின்னர் மத்தியப் பிரதேசத்துடன் இணைந்தது.
இந்த நகரின் அழகே 71 மீட்டர் உயரம் கொண்ட கோட்டையாகும். இதன் சுற்றிலும் 5 கி.மீ. சுற்றளவுக்கு மதில்சுவர் உண்டு. இதற்கு மூன்று நுழைவுவாயில்கள். உள்ளே கில்ஜி மசூதி, ஜெலிகாண்டா அரண்மனை, ஹஸ்ரதபு அப்துல் ரஹ்மான் கல்லறை உள்ளிட்டவை உள்ளன.
இஸ்லாமிய கட்டடக் கலைக்கும் ராஜஸ்தானுக்கு உரிய பூ வேலைப்பாடுகளுக்கு பிரபலமான பகுதியாகும்.பாதால் மஹால், பதான்தர்வாஸா, கோஷாக் மஹால், ராஜா மஹால் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் இந்த நகரில் காண வேண்டியவை.
இந்த ஊரின் மற்றொரு பிரபலம்- சந்தேரி புடவைகள். வண்ணத்துக்கும் கியாரண்டி. மஸ்லீன் துணியில் ஜரிகை முதன்முதலில் இங்குதான் அறிமுகமானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மே.வங்கத்தில் வாக்குப்பதிவு நாளில் பிரதமர் மோடி சாலை வலம்! காரணம் என்ன?

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


