1. நான்கு எழுத்து ராகம், கடைசி இரண்டு எழுத்து புத்தருக்கு ஞானம் தந்த இடம்?
2. காய்ந்த மரத்தில் கல்லெடுத்துப் போட்டேன், காவல்காரர்கள் நூறுபேர் வந்தனர்...
3. ஆடும்போது இரையும், ஆடி முடித்தால் பதுங்கும்... இது என்ன?
4. உயிர் இல்லை ஊரைச் சுமப்பான், பேச்சில்லை பெருமூச்சு விடுவான். இவன் யார்?
5. பளபள பட்டுடுத்தி, பதினாயிரம் குஞ்சரம் தொங்க, தெருவில் அசைந்தாடி வருவாள், திரும்பிப் பார்க்க மாட்டாள். இவள் யார்?
6. உயரே பறந்திடும் பறவையுமல்ல; அழகான வாலுண்டு குரங்கு அல்ல; முகிலில் மறைந்திடும் நிலவு அல்ல... இது என்ன?
7. தந்தைக்கோ அடி, தனயனுக்கோ படி... இது என்ன?
8. மாடி மேல் மாடி கட்டிக் குடியிருக்கும்.... தொட்டால் குத்தும். இது என்ன?
9. மரம் நிறையக் காய் உண்டு, ஆனால் ஒரு காய்கூடப் பழுக்காது. இது என்ன?
விடைகள்:
1. காம்போதி
2. தேன்கூடு
3. பாம்பு
4. ரயில் வண்டி
5. தேர்
6. விமானம்
7. நெற்கதிர், நெல்
8. சப்பாத்திக்கள்ளி
9. முருங்கைக்காய்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை விரும்பும் மக்கள்: சந்திரபாபு நாயுடு

‘எக்ஸ்’ தளத்தில் ஆபாச உள்ளடக்கம்: எலான் மஸ்குக்கு பிரான்ஸ் அழைப்பாணை

அடுக்குமாடி குடியிருப்புகளில் பாமக வேட்பாளா் பாலு பிரசாரம்!

தெற்கு லெபனானில் சிலுவை அவமதிப்பு: இஸ்ரேல் வீரருக்கு வலுக்கும் கண்டனம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


