/

விடுகதைகள்

யாரும் செய்யாத கதவு, தானே திறக்கும், தானே மூடும்.  இது என்ன?

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:29 am

ரொசிட்டா

1.  யாரும் செய்யாத கதவு, தானே திறக்கும், தானே மூடும்.  இது என்ன?

2.  அழகான சின்னப் பெட்டி, சத்தமிடும் சின்னப் பெட்டி, தொட்டுக் காதில் வைத்து விட்டால் பேச்சு சத்தம் கேட்கும் பெட்டி. இது என்ன?

3.  எதிரில் ஒரு திரை, எதையும் காட்டும் திரை, விரலாலே வாசிக்க விடை தரும் திரை. வியக்கும்படி எல்லாமே தருகின்ற திரை?

4.  ராகத்துடன் பாடி வருவார், ராத்தூக்கம் கெடுப்பார். யார் இவர்?

5.  கருப்பு நிறத்தவன்... கலகல பேச்சுக்காரன்.. ஒருவருக்குத் துயர் என்றால் ஊரையே கூட்டிடுவான். யார் இவன்?

6.  தொட்டால் மணக்கும், கடித்தால் புளிக்கும், நீரும் சர்க்கரையும் சேர்ந்தால் உற்சாகம் தரும். என்ன இது?

7.  முதுகில் சுமை தூக்கி முனங்காமல் வருவான். மூச்சும் திணறாது முகமும் கோணாது. இவன் யார்?

8.  ஆனை விரும்பும் சேனை விரும்பும், அடித்தால் வலிக்கும், கடித்தால் இனிக்கும். இது என்ன?

9.  பெயர்தான் பேப்பர், ஆனால் செய்தி ஒன்றும் இருக்காது. இது என்ன?

விடைகள்:

1. கண் இமை

2. செல்போன்

3. கம்ப்யூட்டர்

4. கொசு

5. காகம்

6. எலுமிச்சம்பழம்

7. கழுதை

8. கரும்பு

9. பேப்பர் ரோஸ்ட்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.