காந்தி மகான்...
அக்டோபர் இரண்டு திருநாளாம் யார்க்கும் இனித்திடும் நன்னாளாம் அகிலம் நினைத்திடும் பெருநாளாம் அண்ணல் பிறந்த பொன்னாளாம்! போர் பந்தரில் பிறந்தாராம் மோகன தாசென அழைத்தாராம் போரினை அறவே வெறுத்தாராம் புதுமை வழ


அக்டோபர் இரண்டு திருநாளாம்
யார்க்கும் இனித்திடும் நன்னாளாம்
அகிலம் நினைத்திடும் பெருநாளாம்
அண்ணல் பிறந்த பொன்னாளாம்!
போர் பந்தரில் பிறந்தாராம்
மோகன தாசென அழைத்தாராம்
போரினை அறவே வெறுத்தாராம்
புதுமை வழிகள் வகுத்தாராம்!
அன்பின் வலிமை கண்டாராம்
அனைவரும் சமமெனக் கொண்டாராம்
வன்முறை கேடு என்றாராம்
வல்லரசு தன்னையே வென்றாராம்!
அண்ணல் தலைமை ஏற்றாராம்
அனைவரும் ஒன்று திரண்டாராம்
வெள்ளையர் மிகவும் மிரண்டாராம்
விடுதலை தந்து பறந்தாராம்!
மகாத்மா வாக உயர்ந்தாராம்
மக்கள் உயர உழைத்தாராம்
சகாப்த மொன்று படைத்தாராம்
சத்தியம் வெல்ல வைத்தாராம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...