17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கோதுமை ரவை போளி செய்வது எப்படி?

கோதுமை ரவை போளி செய்யும் முறை....

News image

கோதுமை ரவை போளி

Updated On :24 மே 2026, 4:10 am IST

தேவையான பொருள்கள்:

கோதுமை ரவை, சர்க்கரை -தலா 500 கிராம்

தேங்காய்-ஒன்று

நெய் -100 கிராம்

அரிசி மாவு, வறுத்த கசகசா-தலா 50 கிராம்

ஏலக்காய் -5

உப்பு -தேவையான அளவு

செய்முறை:

கோதுமை ரவை, நெய், அரிசி மாவு மூன்றையும் ஒன்றாகக் கலந்து கொஞ்சம் தண்ணீர் விட்டு இறுகலாகப் பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கரண்டி நெய், உப்பு இரண்டையும் ஒரு தட்டில் போட்டு, நுரை போல் தேய்த்து மேலே பிசைந்து வைத்திருக்கும் கோதுமை ரவையில் தடவி, பஞ்சு போல நன்றாகப் பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும். தேங்காயைத் துருவி சர்க்கரை, வறுத்த கசகசா இவை எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து மாவு போல் பிசைந்து ஏலக்காய்த் தூளையும் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

கோதுமை ரவை கலவையில் எலுமிச்சம் பழ அளவு உருண்டை எடுத்து, அப்பளம் போலச் செய்து, வாணலியில் நெய் விட்டு அந்த அப்பளங்களைப் போட்டு எடுத்தவுடன் தேங்காய் கலந்த சர்க்கரை கலவையில் மேல்புறத்தில் சமமாய் தூவ வேண்டும். பிறகு அதை நான்காக மடித்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு தோசைக்கல்லை அடுப்பில் போட்டு காய்ந்ததும் இந்த நான்காய் மடித்ததைப் போட்டு இருபுறமும் திருப்பி பொன்னிறமானவுடன் எடுத்து வைக்க வேண்டும்.

ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.