மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தேங்காய்ப் பால் பாயசம்

தேங்காயைத் துருவி அரைத்து வெந்நீர் ஊற்றி, கெட்டியான பாலாக எடுக்கவேண்டும்.

News image

தேங்காய்ப் பால் பாயசம்

Updated On :7 மார்ச் 2026, 6:30 pm

தேவையான பொருள்கள்:

முற்றின தேங்காய்- ஒன்று

பச்சரிசி, சர்க்கரை -தலா 200 கிராம்

முந்திரிப் பருப்பு, உலர் திராட்சை -தலா -10

ஏலக்காய் -4

நெய் -இரண்டு தேக்கரண்டி

செய்முறை:

தேங்காயைத் துருவி அரைத்து வெந்நீர் ஊற்றி, கெட்டியான பாலாக எடுக்கவேண்டும். மீண்டும் ஒருமுறை தேங்காயை அரைத்து, தேவையான தண்ணீர் விட்டு பால் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்தப் பாலை கனமான பாத்திரத்தில் ஊற்றி, அடுப்பில் வைத்து கொதித்ததும் பச்சரிசியை ரவை போல் உடைத்து அதில் சேர்க்க வேண்டும்.

அரிசி வெந்ததும், சர்க்கரையைப் போட்டு கொதித்து பாயசம் போல ஆனதும், ஒரு கரண்டியில் நெய் ஊற்றி, அடுப்பில் வைத்து முந்திரி, கிஸ்மிஸ் பழத்தைப் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து, அதை பாயசத்தில் போட வேண்டும். ஏலக்காயை பொடி செய்து பாயசத்தில் சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கி, முதலில் எடுத்து வைத்திருக்கும் பாலை அதில் விட்டு சிறிது நேரம் கரண்டியால் கிளறி, பிறகு கீழே இறக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.