கார் சாம்பியன் டயானா பூண்டோல்..!
சென்னையில் அண்மையில் நடைபெற்ற இந்திய தேசிய கார் பந்தயத்தில் எம்.ஆர்.எஃப். சலூன்ஸ் பிரிவில், 2024-ஆம் ஆண்டுக்கான சாம்பியன் பட்டம் பெற்றிருக்கிறார் டயானா பூண்டோல்.


சென்னையில் அண்மையில் நடைபெற்ற இந்திய தேசிய கார் பந்தயத்தில் எம்.ஆர்.எஃப். சலூன்ஸ் பிரிவில், 2024-ஆம் ஆண்டுக்கான சாம்பியன் பட்டம் பெற்றிருக்கிறார் டயானா பூண்டோல்.
புணேவை சேர்ந்த இருபத்து எட்டு வயதான இவர், இந்தக் கோப்பையை வென்றிருக்கும் முதல் இந்திய பெண்மணி என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார்.
அவரிடம் கூறியதாவது:
''கார் பந்தயங்களில் அர்ப்பணிப்போடு பங்கேற்பேன். இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பிறகும் ஆர்வம் குறையவில்லை.
கார் பந்தயம் பெண்களுக்கு மட்டும் நடந்த பந்தயம் அல்ல; ஆண் வீரர்களும் கலந்து கொண்டனர். பாலின சமநிலையுடன் நடைபெற்ற பந்தயத்தில் சாம்பியன் பட்டம் பெற்றது மகிழ்ச்சிதான்.
இறுதிப் பந்தயங்களில் கவனம் செலுத்த விரும்பியதால் நான் எனது கைப்பேசியைக் கூட தொடவில்லை. அந்த அளவுக்கு ஆர்வத்திலும் விடாமுயற்சியிலும் இருந்தேன். இதற்கு முன்பு துபை ஆட்டோட்ரோம், ஹாக்கன்ஹெய்ம்ரிங், பெல்ஜியத்தில் உள்ள எஃப் 1 சர்க்யூட் டி ஸ்பா மற்றும் ஐரோப்பா, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட பல ஃபார்முலா 1 சுற்று போட்டிகளில் கலந்து கொண்டுள்ளேன். அந்த போட்டி அனுபவங்கள் எனது திறமைகளை மெருகேற்றியதுடன் தேசிய சாம்பியன் போட்டிகளில் சவால்களை எதிர்கொள்ள என்னைத் தயார் செய்தது. ஆண் ஆதிக்கம் அதிகம் உள்ள கார் பந்தயப் போட்டியிலும் சாம்பியனாக முடிந்தது.
கடந்த ஆண்டும் சென்னையில் நடந்த தேசிய கார் பந்தயங்களில் கலந்து கொண்டு முத்திரை பதித்தேன்.
நாடு முழுவதும் இருநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் கார் பந்தயங்களில் பங்கேற்றுவருகின்றனர். அவர்களும் சாதிக்க வேண்டும்'' என்கிறார் டயானா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...