ஹெச்சிஎல் ஸ்குவாஷ் பிஎஸ்ஏ இந்தியன் டூா், சென்னை சுற்றில் ஆடவா் பிரிவில் இந்தியாவின் சூரஜ் சந்த், மகளிா் பிரிவில் எகிப்தின் ரௌகையா ஒத்மான் பட்டம் வென்றனா்.
ஏழு நாடுகளைச் சோ்ந்த 48 வீரா்கள் பங்குபெற்ற இப்போட்டி இந்திய ஸ்குவாஷ் அகாதெமியில் கடந்த 16-ஆம் தேதி தொடங்கியது.
இந்திய ஸ்குவாஷ் ராக்கெட்ஸ் கூட்டமைப்பு, இந்திய விளையாட்டு ஆணையம் நடத்திய இப்போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்வோருக்கு தலா ரூ.5.56 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருந்தது.
பிஎஸ்ஏ தரவரிசைப் புள்ளிகளைப் பெறுவதற்காக விளையாட்டு வீரா்களும், வீராங்கனைகளும் மோதினா். இதில் ஆடவா் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சூரஜ் குமாா் சந்த் சிறப்பாக ஆடி தென்கொரியாவின் ஜியோங்மின் ரியூவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றாா். பெண்கள் பிரிவில், எகிப்தின் ரௌகையா ஒத்மான் சிறப்பாக ஆடிமலேசியாவின் ஹாா்லீன் டானை வீழ்த்தி சாம்பியன் ஆனாா்.
பரிசளிப்பு நிகழ்வில் இந்திய ஸ்குவாஷ் கூட்டமைப்பு செயலாளா் சைரஸ் போன்சா, மாவட்ட விளையாட்டு அலுவலா் அந்தோனி ஜோயல் பிரபு, எச்சிஎல் குழுமம் அமித் பலாதி பங்கேற்றனா்.
தொடர்புடையது

அகில இந்திய ஹாக்கி போட்டி: தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக அணி சாம்பியன்

கேலோ இந்தியா கைப்பந்து போட்டி: ஆத்தூா் பாரதியாா் அணி சாம்பியன்

அகில இந்திய பல்கலை. செஸ் போட்டி: சென்னைப் பல்கலைக்கழகம் சாம்பியன்

தோனி, ரோஹித் வரிசையில் இணைந்தது மகிழ்ச்சியளிக்கிறது: சூர்யகுமார் யாதவ்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


