/

காசி அல்வா

கல்யாணப் பூசணிக்காயின் மேல் தோலை சீவி உள்ளேயுள்ள வெள்ளைச் சதைப் பந்தை எடுக்க வேண்டும்.

News image
காசி அல்வா
Updated On :23 நவம்பர் 2024, 6:30 pm

ஆர். ஜெயலட்சுமி

தேவையான பொருள்கள்:

சர்க்கரை, நெய்- தலா 250 கிராம்

பாதாம் பருப்பு- 10

பச்சைக் கற்பூரம்- சிறிதளவு

கல்யாணப் பூசணிக்காய்- 1

செய்முறை:

கல்யாணப் பூசணிக்காயின் மேல் தோலை சீவி உள்ளேயுள்ள வெள்ளைச் சதைப் பந்தை எடுக்க வேண்டும். வாணலியை அடுப்பில் வைத்து தேவையான தண்ணீரை விட்டு, சர்க்கரையைப் போட்டு பாகாகக் காய்ச்சி பூசணித் துருவலைப் பிழிந்து நீரை எடுத்துவிட்டு, அதில் போட்டு நன்றாகக் கிளற வேண்டும். காய் வெந்து மொந்தையாகும்.

இந்த நேரம் அதில் நெய்யைக் கொஞ்சம், கொஞ்சமாக விட்டுக் கிளறி அல்வா பதம் வந்தவுடன் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் பாதாம் பருப்பு, ஏலப்பொடி, பச்சைக் கற்பூரம் ஆகியவற்றை அதனுடன் சேர்த்து நன்றாகக் கிளறி வாணலியை இறக்கிவைத்துவிட வேண்டும்.

ஒரு தாம்பாளத்தில் நெய்யைத் தடவி அல்வாவைவிட்டு சமமாகத் தட வேண்டும். ஆறியவுடன் துண்டுகள் செய்ய வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.