திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கர்நாடகா பென்ன தோசை

News image
Updated On :4 மே 2024, 6:30 pm

தேவையான பொருள்கள்

இட்லி அரிசி - 1 கிண்ணம்

உளுந்தம்பருப்பு - 1/4 கிண்ணம்

அவல் பொரி - 1 1/2 கிண்ணம்

வெந்தயம் - 1/2 தேக்கரண்டி

தண்ணீர் - 3 கிண்ணம்

சர்க்கரை - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

இட்லி அரிசி, உளுந்தம்பருப்பு, அவல்பொரி, வெந்தயம் அனைத்தையும் தனித்தனியாக நன்றாகக் களைந்து, 3 கிண்ணம் தண்ணீர் சேர்த்து நான்கு மணி நேரம் ஊற வைத்து, எல்லாவற்றையும் ஒன்றாகப் போட்டு இட்லி மாவு பதத்துக்கு அரைத்துக் கொள்ளவும். அதில் சர்க்கரை சேர்த்து கலந்து ஆறு மணி நேரம் அப்படியே வைத்து புளித்த பிறகு, உப்பு சேர்த்து கலந்து கனமான தோசையாக ஊற்றி எடுத்தால், சுவையான, மிருதுவான கர்நாடகா ஸ்டைல் பென்ன தோசை தயார். தேங்காய் சட்னி, மிளகாய்ப் பொடி சேர்த்து சாப்பிட கூடுதல் சுவையைத் தரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.