மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

கோவைக்காய் உசிலி

முதல்நாள் இரவே பட்டாணியை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். கோவைக்காயை பொடியாக நறுக்க வேண்டும். மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.

News image
Updated On :7 அக்டோபர் 2023, 6:30 pm

தேவையான பொருள்கள்:

கோவைக்காய் 300 கிராம்
துவரம் பருப்பு 1 மேசைக் கரண்டி
காய்ந்த பட்டாணி 1 மேசைக்கரண்டி
தேங்காய்த் துருவல் 1 மேசைக்கரண்டி
பெரிய வெங்காயம் 3
காய்ந்த மிளகாய் 4
கடுகு 1 தேக்கரண்டி
மஞ்சள் பொடி சிறிதளவு
உப்பு, எண்ணெய் தேவையான அளவு

செய்முறை: 

முதல்நாள் இரவே பட்டாணியை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். கோவைக்காயை பொடியாக நறுக்க வேண்டும். மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்க வேண்டும். தேங்காய்த் துருவல், காய்ந்த மிளகாய், பட்டாணி ஆகிய மூன்றையும் சேர்த்து ஊற வைத்திருக்கும் துவரம் பருப்புடன் சேர்த்து கொரகொரவென்று அரைத்துகொள்ள வேண்டும்.  வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் கடுகு போட்டு தாளித்து வெங்காயத்தைப் பொன்னிறமாக வறுக்க வேண்டும். பின்பு, அதில் அரைத்த விழுதைப் போட்டு நன்றாக வதக்கி உதிரியாக வரும்போது, கோவைக்காயை சேர்த்து நன்றாகக் கிளறி கீழே இறக்கி ஆறியதும் எடுத்துப் பரிமாறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.