ஒரு நல்ல கருத்தைச் சொல்வதற்கு பல கலை வடிவங்கள் இருக்கின்றன என்றாலும் தொன்று தொட்டு மக்கள் விரும்பும் கலை வடிவங்களுள் ஒன்று ஹரிகதை. காலத்திற்கேற்ப பல மாற்றங்கள் இருந்தாலும் இன்றும் மக்கள் மனதில் ஹரிகதைக்கு தனி இடம் உண்டு. சிறுமியாக இருக்கும் பொழுதே ஹரிகதை சொல்லத் தொடங்கிய பிரஷாந்தியின் கதை சுவாரசியமானது. தன் ஹரிகதை பயணத்தின் பக்கங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்:
முதல் மேடை அனுபவம் பற்றி...
எனக்கு ஒன்பது வயதான போது முதன் முதலில் சென்னையில் 2012}இல் வேணுகோபாலஸ்வாமி கோயிலில் கிருஷ்ண லீலா பற்றி ஹரிகதை. இந்த நிகழ்ச்சிதான் என்னுடைய முதல் நிகழ்ச்சி. அதிலிருந்து இறையருளால் தொடர்ந்து நிகழ்ச்சிகள் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.
தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?
பனிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறேன். இசை வகுப்புகளிலும் கவனம் செலுத்துகிறேன். ஆறு வயதில் கர்நாடக சங்கீதம் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். என்னுடைய அம்மா நிறைய கதைகளை சொல்லிக் கொடுத்திருந்தார்கள். அதை கொண்டு தான் ஆரம்பத்தில் ஹரிகதை நிகழ்ச்சிகள் செய்து கொண்டிருந்தேன். இப்போது நானும் நிறைய படிக்கிறேன். அதற்கு ராமகிருஷ்ண மடத்திற்கும் சுவாமி விமூர்த்தானந்தாவுக்கும் தான் நன்றி சொல்ல வேண்டும். தொடர்ந்து எனக்குப் புத்தகங்கள் தந்து ஊக்கப்படுத்தி மடத்தின் நிகழ்ச்சிகளிலும் பங்கெடுக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தார்கள். ராமகிருஷ்ண மடத்தின் "யுவ சங்கர்ஸ்' என்ற சர்வதேச போட்டியில் இறுதி சுற்றுக்கு வந்திருக்கிறேன்.
பக்தி சாகர் பற்றிச் சொல்லுங்கள்?
2016}இல் "பக்தி சாகர்' என்ற குழுவை ஏற்படுத்தினோம். இசை ஆர்வம் உள்ளவர்கள் ஒன்று சேர்ந்து நாமசங்கீர்த்தனம் நிகழ்ச்சிகள் வழங்குகிறோம். இது முற்றிலும் ஆத்ம திருப்திக்காகவும் இறை சேவையாகவும் மட்டுமே செய்கிறோம். பொருள் ஈட்டுவதற்கல்ல. ஆறு பேரோடு தொடங்கிய குழுவில் தற்போது நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள்.
உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன?
நாமசங்கீர்த்தனம், ஹரிகதை நிகழ்ச்சிகளை இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அதற்காக டிஜிட்டல் தளத்திற்கு அவற்றை எடுத்து செல்ல வேண்டும். சனாதன தர்மம் கற்றுக் கொடுக்கும் விழுமியங்களை கதை வடிவில் என் தலைமுறைக்கு ஆர்வமூட்டும் வகையில் சொல்லிவிட வேண்டும்.
எங்கெல்லாம் நிகழ்ச்சிகள் நடத்தி இருக்கிறீர்கள்?
தமிழ்நாட்டில் சென்னையில் பல இடங்களிலும் நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறோம். கும்பகோணத்திற்கு அருகில் சங்காளிபுரம், கோவிந்தபுரம், மும்பையிலும் பல நிகழ்ச்சிகள் பல இடங்களில் செய்திருக்கிறேன், மகாராஷ்டிரத்தில் ஷீரடி, பண்டரிபுரம், ஆந்திரத்தில் திருமலையில் நிகழ்ச்சி செய்திருக்கிறேன், இப்படியே நாற்பதுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் தந்திருக்கிறேன்.
உங்கள் ஹரிகதைகளின் மையக் கருத்து என்ன?
இதுவரை, அன்னமாச்சார்யா, ஷீரடி பாபா மஹாத்ம்யம் என்று மஹான்கள், ஆச்சார்யர்களின் சரிதங்களை அதிகம் சொல்லியிருக்கிறேன்.
ஒரு தனியார் சேனலில் பகவத் கீதை ஸ்லோகங்களுக்குக் கதையோடு கூடிய விளக்கங்கள் தந்து ஸ்லோகங்களை எளிமையாக மனதில் பதியும் படியான புதிய முயற்சியை செய்து வருகின்றேன். எனக்கு நற்பெயரும் மன திருப்தியும் தரும் முயற்சியாக இதனைச் சொல்லுவேன்.
மறக்க முடியாத அனுபவம்?
இரண்டு நிகழ்ச்சிகளைச் சொல்ல வேண்டும். ஷீரடியில் பாபா கோயிலிலேயே இரண்டு முறை ஹரிகதை நிகழ்ச்சியை செய்திருக்கிறேன். முதன் முறை கோயில் பிரகாரத்தில் கதை சொன்னேன். ஆனால் மனம் முழுவதும் பாபாவுக்கு முன்னால் கதை சொல்ல வேண்டும் என்ற ஆசை. மறுமுறை பாருங்கள், சென்ற ஆண்டு பொங்கல் அன்றைக்கு, எப்போதும் போல இல்லாமல் அன்றைக்கு என்ன காரணத்தாலோ பாபா சந்நிதியிலேயே நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள். சந்நிதியில் பாபா, அவருக்கு நேரெதிரில் நான் அமர்ந்து அவருடைய மஹாத்ம்யத்தைச் சொல்லுகிறேன். மனிதர்கள் யாரும் எதிரில் இல்லை. பாபாவும் நானும் மட்டுமே, இப்படியான வாய்ப்பை என்னவென்று சொல்வது? தெய்வ சங்கல்பம் என்று தான் நினைத்து நெகிழ்ந்து போனேன்.
பொது முடக்கம், பொது நிகழ்ச்சிகள் நடத்த முடியாத சூழலில் என்ன செய்கிறீர்கள்?
என்னுடைய நண்பர்களோடு சேர்ந்து "வாழ்க்கைத் திறன்களுக்கான கல்வி' அகாதெமியை தொடங்கியிருக்கிறேன். சமூகத் திறன்கள், உணர்வுத் திறன்கள், சிந்தனைத் திறன்களை வளர்த்தல் என்ற மூன்று விஷயங்களை அதன் மையக் கருத்தாக வைத்திருக்கிறோம். இதற்கென பல இணைய வழி நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறோம். அதிலே புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, ஹரிகதை நிபுணர் விசாகா ஹரி என பலரையும் அழைத்து அவர்களது அனுபவங்களைக் கேட்டறிந்தோம். நிறைய கல்லூரி மாணவர்கள் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்கள். நம்முடைய சமயம் கற்றுக் கொடுக்கும் மதிப்பீடுகளை இன்றைய தலைமுறையில் இந்தத் தொழில் நுட்ப உலகில் எப்படிப் பின்பற்றுவது என்பதைக் கண்டறிவது தான் எங்கள் நோக்கம்.
எப்படி ஒரு நிகழ்ச்சிக்குத் தயாராகிறீர்கள்? என்னவெல்லாம் படிக்கிறீர்கள்? நேரம் இருக்கிறதா?
ஒரு ஹரிகதை நிகழ்ச்சி ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம் வரை இருக்கும். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் என ஐந்து மொழிகளை என் பெற்றோர் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். பள்ளிக்கூடப் படிப்பு தவிர்த்து நிகழ்ச்சிக்குத் தேவையான புத்தகங்கள் படிப்பது, பாடல்களை மீண்டும்
மீண்டும் பாடிப் பயிற்சி பெறுவது இவை தான் என்னுடைய வேலை. கற்றது கையளவு தானே. அதனால் தொடர்ந்து கற்றுக் கொள்ள அவசியம் இருக்கிறது. அதற்கு நிறைய நேரம் இருக்கிறது. தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகளிலும் ஹரிகதை சொல்கிறேன். தற்போது ஹிந்தியிலும் வாய்ப்பு வருகிறது. இன்னும் நிறைய வேலை இருக்கிறது.
விருதுகள் பற்றி...
விருதுகள் என்பதை விட பொறுப்புகள் என்பது பற்றிச் சொல்ல விரும்புகிறேன். சமீபத்தில் இளைஞர்கள் பங்கேற்ற பாரதப் பிரதமரின் கொவைட் விழிப்புணர்வு பிரசாரத்திற்கான
விடியோவில் பங்கேற்றது எனக்கு விருதுகள் பெறுவதைக் காட்டிலும் அதிக மகிழ்ச்சியைக் கொடுத்தது.
ராமகிருஷ்ண மடத்தின் தன்னார்வலராக செயல்படுகிறேன். சுவாமி விவேகானந்தரின் கருத்துக்களைக் கதையாகச் சொல்கிறேன். ஷீரடி பாபாவின் பக்தையாக அவரது சரிதத்தை, பஜன் பாடல்களைத் தொடர்ந்து பேசியும் பாடியும் வருகிறேன். இந்த முயற்சியில் சரஸ்வதி கான ரத்னா என்ற விருதும், 2020}ஆம் ஆண்டுக்கான சேஷன் சம்மான் விருதும் கிடைத்திருக்கின்றன. கிடைக்கும் வாய்ப்புகள் எல்லாம் இறைவனின் கருணை என்று நினைத்து ஏற்றுக்கொண்டு முன்னேறுகிறேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

