நடிகை தாப்ஸி, கங்கனா ரணாவத் குறித்து பேசியுள்ளார்.
நடிகை தாப்ஸி நடிப்பில் வெளியான ஆசிஸ் (asis) திரைப்படம் நல்ல விமர்சனங்களுடன் ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
தொடர்ந்து, தாப்ஸி கதையம்சமுள்ள படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருவதால், அவரின் திரைப்படங்களுக்கென ரசிகர்களும் உள்ளனர்.
இதற்கிடையே, பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தாப்ஸிக்கும் கங்கனா ரனாவத்துக்கும் இடையே ஏதோ சண்டை இருப்பதால்தான் இருவரும் பொது நிகழ்வுகளில் கலந்துகொள்ளும்போது கூட ஒருவரை ஒருவர் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர் என தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய தாப்ஸியிடம், “உங்களுக்கும் கங்கனாவுக்கு இடையே என்ன பிரச்னை?” எனக் கேட்கப்பட்டது.
அதற்கு தாப்ஸி, “எனக்கும் அவருக்கும் எந்த சண்டையும் இல்லை. நாங்கள் சண்டையிட்டதை யார் பார்த்தார்கள்? நான் அவரை எங்கும் தவறாக பேசியதும் இல்லையே? அவர்களுக்கு அதுதான் சந்தோஷம் என்றால் நாங்கள் இருவரும் சண்டையிட்டுக் கொண்டதாகவே நினைத்துக்கொள்ளட்டும். உண்மையில், அவரின் சகோதரிதான் என்னைச் சீண்டினார்.” எனத் தெரிவித்துள்ளார்.
கங்கனாவின் சகோதரி ரங்கோலி சாண்டல் சில ஆண்டுகளுக்கு முன் தாப்ஸியை, ‘மலிவான நகல்’ (சீப் காபி) என சொன்னது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மத்திய அமைச்சருடன் காதலா? கங்கனா ரணாவத் பதில்!
தவறான ரயில்... விவாகரத்து குறித்து ஹன்சிகா!

ராகுல் பேசுவதைக் கேட்பதே தலைவலியாக இருந்தது! கங்கனா ரணாவத்

குரலை இழந்தது எப்படி? கலாரஞ்சினி விளக்கம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


