நடிகை ஹன்சிகா மோத்வானி தன்னுடைய விவாகரத்து குறித்து பேசியுள்ளார்.
தமிழில் மாப்பிள்ளை படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி, வேலாயுதம், பிரியாணி, சிங்கம் 2 ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார்.
குறுகிய காலத்தில் விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற பெரிய நட்சத்திரங்களுடன் ஜோடியாக நடித்து பிரபலமான ஹன்சிகா, சில ஆண்டுகளாக பெரிதளவில் படங்களில் நடிக்காமல் இருந்தார்.
இவர் கடந்த 2022 டிசம்பரில் தொழிலதிபர் சோஹல் கதூரியா என்பவரை மணம் முடித்தார். தொடர்ந்து, மும்பையில் புதிய வீடு ஒன்றை வாங்கி இருவரும் குடியேறினர். இதற்கிடையே, ஹன்சிகாவும் அவரது அம்மாவும் தன்னைக் கொடுமைப்படுத்தியதாக கடந்தாண்டு ஹன்சிகாவின் நாத்தனார் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இந்தக் குழப்பங்களுக்கு இடையே அண்மையில், ஹன்சிகா விவாகரத்து பெற்று கணவரைப் பிரிந்தார். இதற்கான காரணம் இதுதான் என சில ஊகங்கள் பகிரப்பட்டு வந்தன.
இந்த நிலையில், தன் விவாகரத்து குறித்து பேசிய ஹன்சிகா மோத்வானி, “தவறான ரயிலில் ஏறிவிட்டால், அதிலேயே பயணிக்க வேண்டுமென்பது இல்லை. அதிலிருந்து இறங்குவதுதான் நல்லது. நான் இறங்கிவிட்டேன். நடந்து முடிந்ததற்காக எந்த வருத்தமும் இல்லை.” எனத் தெரிவித்துள்ளார்.
விவாகரத்துக்குப் பின் ஹன்சிகா நடிப்பில் முழுமையான கவனத்தைச் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Actress Hansika Motwani has spoken about her divorce.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குரலை இழந்தது எப்படி? கலாரஞ்சினி விளக்கம்!
எனக்கெல்லாம் ரசிகர்களா... நன்றி சொன்ன பிரதீப் ரங்கநாதன்!

காதல் தோல்வி, தொடர் ரூ. 100 கோடி... உண்மையைச் சொன்ன பிரதீப் ரங்கநாதன்!

கணவரைப் பிரிந்தார் ஹன்சிகா!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


