எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியதைக் கேட்பதே பெரும் தலைவலியாக இருந்ததாக பாஜக எம்.பி. கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.
தொகுதி மறுவரையறை மசோதா, யூனியன் பிரதேச தொகுதிகள் மறுவரையறை திருத்த மசோதா, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்கள் நேற்று(ஏப். 16) மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று மசோதாக்கள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், பாஜகவையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார். அப்போது பிரதமர் மோடியை ஒரு மாயாஜாலக்காரர் என்று பேசியது பாஜகவினர் மத்தியில் எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது.
மக்களவையில் ராகுலின் உரை குறித்து செய்தியாளர்களுடன் பேசிய பாஜக எம்.பி. கங்கனா ரணாவத்,
"ராகுல் காந்தி பேசுவதைக் கேட்பதே பெரும் தலைவலியாக இருந்தது. அவர் தனது குழந்தைப் பருவத்தில் ஏற்பட்ட வருத்தங்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். அவர் தனது சிறு வயதில் ஏற்பட்ட மன அதிர்ச்சிகளால், மாயாஜாலங்களால் பாதிக்கப்பட்டிருக்கிறார். உண்மையில ராகுல்தான் ஒரு மாயாஜாலக்காரர். பேசுவதை நிறுத்துமாறு அவைத் தலைவர் கூறியும் ராகுல் நிறுத்தவில்லை. அது தொல்லையாக இருந்தது. நாடாளுமன்றத்தை கேலிக்கூத்தாக்கிவிட்டார் ராகுல்" என்று கூறினார்.
Summary
BJP MP Kangana Ranaut says It was such a headache to listen to Rahul gandhi speech
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மத்திய அமைச்சருடன் காதலா? கங்கனா ரணாவத் பதில்!

நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!
எதிர்க்கட்சித் தலைவர்களைவிட வளர்ப்பு நாய்க்கு முக்கியத்துவம் கொடுக்கிறாரா ராகுல்?
மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி! ராகுல் வீட்டின் அருகே பாஜக மகளிரணி போராட்டம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



