மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மோடி ஒரு மாயாஜாலக்காரர்! ஆபரேஷன் சிந்தூர் போன்ற வித்தைகளை செய்தவர்! ராகுல் பேச்சு

தொகுதி மறுவரையறை விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேச்சு...

News image

ராகுல் காந்தி

Updated On :17 ஏப்ரல் 2026, 10:35 am

பிரதமர் மோடி ஒரு மாயாஜாலக்காரர் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியது அவையில் சலசலப்பை ஏற்படுத்தியது.

தொகுதி மறுவரையறை மசோதா, யூனியன் பிரதேச தொகுதிகள் மறுவரையறை திருத்த மசோதா, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்கள் நேற்று(ஏப். 16) மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்று வருகிறது.

விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில்,

"பாஜக என்பது ஒரு அரசியல் கட்சி மட்டுமே. பாஜக என்பது இந்தியா அல்ல. பிரதமரும் பாஜகவும் இந்தியாவின் ராணுவ வீரர்கள் இல்லை. பிரதமர், பாஜகவைப் பற்றி ஏதாவது பேசினால் உடனடியாக ராணுவ வீரர்கள் பின்னால் ஒளிந்து கொள்கிறார்கள்.

நம்மிடம் ஒரு பிரபலமான வித்தைக்காரர் இருக்கிறார். பல வித்தைகளை நிகழ்த்துகிறார். பாலகோட் தாக்குதல், பணமதிப்பிழப்பு, ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜால வித்தைகளை நிகழ்த்திய அவர், தற்போது கையும் களவுமாக பிடிபட்டுவிட்டார்.

மேஜிக் காட்டுவதுபோல 3 மசோதாக்களையும் ஒன்றன்மீது ஒன்றாக மறைத்துக் கொண்டு வந்துள்ளார். அவருக்கும் தொழிலதிபருக்கும் இடையே ஒரு கூட்டணி இருப்பதை அனைவரும் அறிவார்கள்.

மசோதா நிறைவேறாது எனத் தெரிந்தும் பீதியில் இதனை கொண்டுவந்துள்ளனர். தென் மாநிலங்கள் பயப்பட வேண்டாம். இந்த மசோதாக்கள் நிறைவேறாது" என்று பேசினார்.

பிரதமர் மோடி குறித்து ராகுல் காந்தி இவ்வாறு பேசியதும் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.

பிரதமர் குறித்து ராகுல் காந்தி முறையற்ற சொற்களைப் பயன்படுத்துவதாகவும் பாலகோட் தாக்குதல்கள், 'ஆபரேஷன் சிந்தூர்' ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி நாட்டின் நற்பெயருக்கும், ராணுவத்திற்கும் களங்கம் விளைவிப்பதாகவும் மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார். தொடர்ந்து பாஜக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

LoP Rahul Gandhi says, PM Modi is famous magician of Balakot, demonetization, Sindoor

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.